சுஜாதா !!!
“எழுத்துலகின் அனைத்து எல்லைகளையும் தொட்டு பார்த்தவர் ” எனும் பெருமைக்குரியவர் சுஜாதா.நம்மில் பலருக்கு சுஜாதா ஒரு புத்தக எழுத்தாளராகத்தான் பரிட்சயம். ஆனால் இவரது வசனங்களும்…திரைக்கதையும்…எப்போதும் திரைப்படத்தில் தனி ஆளுமையும்…வசீகரத்தையும் கொண்டிருக்கும்.
மணிரத்னம், சங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல மாயப் பிணைப்பை நமக்கும்திரைப்படத்திற்கும் இடையே தோற்றுவித்திருக்கிறார். சுஜாதா ஒரு ‘மாயா’விதான்.
அவற்றில் சில உங்களுக்காக…
இதன் வாசிப்பு தன்னிலை அறியா ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்.
“தான் செய்யறது தப்புன்னே உறைக்காத அளவுக்குஉங்களுக்கு தப்பு பழகி போச்சுடா !!”
-இந்தியன்
“அங்கலாம் கடமைய மீறறதுக்குதாண்டா லஞ்சம் !இங்க கடமையை செய்யுறதுக்கே லஞ்சம் !”
-இந்தியன்
தப்பென்ன பனியன் சைஸா ஸ்மால் மீடியம் லார்ஜ்னு விளைவோட சைஸ பாருங்க…எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்..”
-அந்நியன்
சில கேள்வி பதில்கள்…
கேள்வி : இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி மதங்கள் இருக்குமா?பதில் : ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்…
கேள்வி : கடவுள் கொள்கைகளில் உங்கள் தெளிவான முடிவு என்ன ?பதில் : கடவுள் இருக்கிறார்…கடவுள்கள் இல்லை.
கேள்வி : ஒரு புலி நம்மளைத் திங்காம சாந்தமா பார்த்தா என்ன அர்த்தம்?
பதில் : அது புலி இல்லைனு அர்த்தம்.
இது போன்ற சாமர்த்திய சொல்லாடல் கொண்ட எழுத்துக்கள் அதிமேம்பாடு அடைந்தவையாக
வியப்புற வைக்கும். பன்முகங்கள் கொண்டிருந்தாலும் தன்னை எழுத்தாளராகவே முன்னிறுத்துவதில் பெருமை கொள்பவர்…அவரே ‘சுஜாதா’ ரங்கராஜன்.
இன்னும் சுஜாதா 3,4,5 லாம் வரப்போகுது வாசிங்க..
Leave a Reply