‘வளையோசை’ பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதற்காக பத்திரிக்கையின் சீஃப் சப்போர்ட்டர் சுடர்கொடிக்காகக் காத்திருந்த விவேக்கிற்கு வந்து சேர்ந்தது அந்த திடுக்கிடும் செய்தி. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாள், சுடர்கொடி. ஸ்பாட்டிற்கு விரைந்த விவேக்கின் கையில் கிடைத்தது முக்கியத் தடயமான சுடர்கொடியின் டயரி. மேலும், சுடர்கொடியின் வீட்டை சோதனையிடச் சென்றபோது அவளுடைய அண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டில் கிடைத்த பொருள்கள் விவேக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விவேக்கிற்கு உதவிசெய்ய முன்வருகிறாள் சுடர்கொடியின் தோழி ஜெபமாலை. அவளுக்கும் விஷம் கொடுக்கப்பட நினைவிழக்கும் நிலையில் மூன்று வார்த்தைகளைத் திக்கித் திணறி விவேக்கிடம் சொல்கிறாள். அந்த வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு கேஸை மேற்கொண்டு நகர்த்துகிறான் விவேக்.
சுடர்கொடியின் டயரியில் இருந்த குறிப்பு என்ன? சுடர்கொடியின் மரணத்திற்கு யார் காரணம்? அவளுடைய அண்ணன் தற்கொலை செய்துகொண்டது ஏன்? ஜெபமாலையின் கொலைக்குப் பின்னணி என்ன? ஜெபமாலை கூறிய வார்த்தைகள் என்ன? இது போன்ற கேள்விகளின் பின்னணியில் இயங்கும் முக்கியப் புள்ளிகளை முழுக்கதையையும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #1+1=0
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=585
Leave a Reply