#23 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாட்டின் தலைநகர் மஸ்கட்.
  2. இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீட்சை மற்றும் உலோகங்கள்.
  3. இந்த நாட்டில் வருமானவரி இல்லை.
  4. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் அதிகமாக வாழ்கின்றனர்.
  5. குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.
  6. குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.
  7. தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
  8. அரேபியத் தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு.
  9. 1970 ஜூலை 23 அன்று தொடங்கி இன்றுவரை ஒரே சுல்தான் தான் நீண்டகாலம் ஆட்சி செய்கிறார்.
  10. இந்த நாட்டின் பாஹ்லா என்ற நகரம் மண்பாண்டங்களுக்குப் புகழ்பெற்றது.

இந்தப் பத்து கேள்விகளும் பிரபலமான ஒரு நாட்டைக் குறிக்குது.

If anyone can, find this country..?

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

One thought on “#23 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: