தண்ணீர் தேசம்

இதை கதை என்பதா..? கவிதை என்பதா..?

கவிதை சொல்லும் கதை இதுதான் சரியா இருக்கும்.

இது ஒரு ‘love story’ இல்லை. இதை ஒரு ‘survival story’ அப்படின்னும் சொல்லலாம்.

அனுபவமா..? அறிவியலா..?

மனித அனுபவ அறிவியல் என்றும் சொல்லலாம்.

ஆனால், வைரமுத்துவைப் படிக்கும்போது நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும், சிந்தனையும் வாழ்வின் மீதான வித்தியாசமான கண்ணோட்டமும் உருவாகும் நிச்சயமாக.

அந்த வரிசையில் தண்ணீர் தேசம் ஒரு பொக்கிஷம்தான்.

கவிதைக்கதை கடற்கரையில் தொடங்கி கடல் அலையில் முடிகின்றது. காதலும் கடவுளும்(இயற்கை) நிகழ்த்தும் விளையாட்டில் மனிதன் செய்யும் எதார்த்தங்களை எண்ணங்களில் இருந்து வடிவமைத்த கவிதைக் கதை.

கடல் பயம் கொண்ட தமிழ்ரோஜாவை கடற்பயணத்திற்கு அழைத்துச் செல்லும் கலைவண்ணன் மற்றும் மீனவர்கள்.

ஆரம்பப்பயணம் சுகமானதாகவும் பாதுகாப்புடனும் 48 கி.மீ. கடக்கிறது. அதோடு நல்ல காலமும்தான். கடலில் படகு எந்திரம் பழுதாகிறது. வாழ்க்கைப் போராட்டம் தொடங்குகிறது. அவர்கள் கடக்க முயற்சிக்கும் நாட்களின் நிலவரங்களும், கலவரங்களுமே தண்ணீர் தேசம். அவர்கள் மீட்கப்பட்டனரா? இது உண்மையில் உங்களை அச்சூழலில் நிலைக்கச் செய்யும் முயற்சி.

தகவல்களுக்கும் உவமைகளுக்கும் பஞ்சமிருக்காது.

#one minute one book #tamil #book #review #vairamuthu #thanneer desam

want to buy : https://www.amazon.in/Thanneer-Desam-Vairamuthu/dp/B00HR1UNN

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading