2000 சதுர அடி சொர்க்கம் – Crime Novel

மிஸ்டர் டிஸ்ஸாஸ்டர் என்று வான இயல் வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்ட வால்நட்சத்திரத்தைப் பற்றி ஸ்பேஸ் ரிசர்ச் சென்டரின் ரிடையர்ட் டைரக்டர் ரவிசங்கரிடம் விசாரிக்க வருகிறாள் டாக்டர் வாணி சுந்தர். விபரீத வால்நட்சத்திரம் கடினமான உப்புக்களாலும் தாதுக்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும் வால்நட்சத்திரம் பூமியை உரசிச் செல்வதால் ஓசோனில் ஓட்டை உண்டாக்கி அதன் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் விழ வாய்ப்புள்ளதாகவும் முழுவதுமாக விவரித்தார் ரவிசங்கர். அடுத்ததாக அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன அவர் வந்திருப்பது டாக்டர் இல்லை என்பதை உணர்ந்தார். மேலும், வால்நட்சத்திரத்திலிருந்து கிடைத்த தாதுக்கள் பற்றி அவள் கேட்டபோது அந்த சந்தேகம் உறுதியானது. நான்கு வகைத் தாதுக்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவள் பிஸ்டலை வைத்து மிரட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட அவர் செய்வதறியாது விழித்தார்.

டாக்டர் என்ற போர்வையில் மிரட்டிய அந்தப் பெண் யார்? தாதுக்களைக் கேட்பதன் நோக்கம் என்ன? 2000 சதுர அடி சொர்க்கம் என்ற வார்த்தைக்கும் அந்த தாதுக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதை விறுவிறுப்புடன் சிலாகிப்பதே “2000 சதுர அடி சொர்க்கம்”.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #2000_sadhura_adi_sorkkam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=206

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: