“ஒரு சிறிய விதைக்குள் எத்தனை விருட்சங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்”.
உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மீக ரகசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாஸ்டருக்கு, பூமி தற்போது அழிவு நிலைக்குப் போய்க்கொண்டிருப்பதையும், அதற்கு தூய்மையிலும் தூய்மையான அறிவில் உச்சமாக இருக்கும் ஒருவனைத் தீய சக்திகள் பயன்படுத்தி பூமியை அழிக்க நினைப்பதையும் அறிந்தபோது அவர் மனம் பதறியது. இந்நிலையில் மேற்சொன்ன மேன்மையான க்ரிஷ் எதிரிகளின் சூழ்ச்சியினால் பாம்புக்கடிக்கு உள்ளாகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாக வேற்றுகிரஹவாசியால் காப்பாற்றப்படுகிறான். அதேவேளையில் மர்ம மனிதன் மாஸ்டரின் ஜாதகத்தையும் க்ரிஷின் ஜாதகத்தையும் தேர்ந்த ஒரு ஜோதிடரிடம் கொடுத்து பிரசன்னம் பார்க்கிறான். மாஸ்டரின் குருவைக் கொன்று அவரைக் குழப்பி திசை திருப்புகிறான் மர்ம மனிதன். பாசமான குடும்பம்-காதல்-சதி-ஏலியன்-ஆன்மீக ரகசிய இயக்கம்-சக்தி வாய்ந்த மர்ம மனிதன்-இல்லுமினாட்டி என இவற்றின் பின்னணியில் உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் போராடும் ஹீரோ க்ரிஷ்.
#one_minute_one_book #tamil #book #review #n_ganesan #iruveru_ulagam #two_different_world
Drop your Thoughts