சந்தேகம்…
சந்தேகமா…?
“சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!!
எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!!
நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!”
இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம்.
20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின் முன் கேள்விகளும் தோன்றியது. என்ன செய்வது விவேக்கை வடிவமைத்த வேலைக்கு அண்ணன் ராஜேஷ்குமாருக்கு கிடைத்த போனஸ். எனவே, அவர் எழுதும் விளக்கங்களுக்கும் விடைகளுக்கும் அவரே போனஸ் செய்தி போடுவார். விறுவிறுப்பான கதைக்கு மத்தியில் விளக்கம் ப்ளீஸ் விவேக் நமக்கு படத்திற்கு இடையில் வரும் இடைவேளை போல!
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vilakkam_please_vivek