தேவியின் சாபம்

ஓய்வைக் கழிப்பதற்காகத் தன் நண்பரின் அழைப்பை ஏற்று ஹஸாரி பாகில் தங்குவதற்கு முடிவு செய்கிறார் ஃபெலுடா. ஹஸாரி பாக் பயணத்தின்போது அறிமுகமான சௌதுரி தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு ஃபெலுடாவிற்கு அழைப்பு விடுத்தார். ஹஸாரி பாகிற்கு வந்து சேர்ந்ததும் தொப்ஷேவிற்கும் கங்குலிக்கும் எதிராக புலி ஒன்று தோன்றி மறைந்தது. அப்பொழுதுதான் தி கிரேட் மெஜஸ்டிக் சர்க்கஸிலிருந்து புலி தப்பித்த செய்தி கிடைத்தது. அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்ட ஃபெலுடா, சௌதுரி வீட்டு விழாவிற்கு செல்கிறார். அங்கே தான்..

ஓய்வுப் பயணம் திகில் பயணமாக மாறியது. சௌதுரியின் தந்தை இறந்து கிடந்தார். ஃபெலுடாவின் வேலை தொடங்கிய சில வேளையிலேயே பல அதிர்ச்சிகள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. பல நாடுகளிலிருந்து இறந்து போனவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள், தொலைந்துபோன மகன், களவாடப்பட்ட அவருடைய பொக்கிஷங்கள், விநோதமாக ஒரு புலிக்கு இரண்டு மாஸ்டர்கள் என இக்குழப்பங்களுக்கு இடையில் ஃபெலுடா முன்பு இருந்த கொலைவழக்கைத் தீர்க்க முடிந்ததா? தடயங்கள் கிடைத்ததா? தேவியின் சாபம் என்னவாக இருக்கும்? வாசித்துப் பாருங்கள்.

#one_minute_one_book #tamil #book #review #satyajit_ray #feluda #deviyin_saabam

want to buy : https://www.panuval.com/deviyin-saabam-3680544

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: