- பசிபிக், கரீபியன் ஆகிய கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.
- இந்நாட்டின் தலைநகர் பொகோட்டா.
- இந்நாட்டில் மரகதக் கற்கள் மற்றும் காபி பிரபலம்.
- இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
- அமேசான் மழைக் காடுகளின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.
- இந்த நாடு தென் அமெரிக்காவின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.
- ஐந்து வண்ணக் கற்களால் நீரில் தோன்றும் வானவில் போன்று இந்த நாட்டின் மிக அழகான நதி கேனோ கிரிஸ்டஸ் காட்சியளிக்கிறது.
- இந்த நாடு பனாமா, வெனிசுலா, பிரேசில், ஈக்வடார், பெரு போன்ற நாடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
- காண்பதற்கரிய வண்ணத்துப்பூச்சிகள், ஆர்கிட் செடிகள் மற்றும் அழகிய விஷத் தவளைகள் இங்கே உள்ளன.
- ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்ற மிகப் பிரபலமான புத்தகத்தை எழுதிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

This 10 questions indicate a famous country. If you can find the answer, comment below..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – கொலம்பியா
Correct Answer – Colombia