#27 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. பசிபிக், கரீபியன் ஆகிய கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.
  2. இந்நாட்டின் தலைநகர் பொகோட்டா.
  3. இந்நாட்டில் மரகதக் கற்கள் மற்றும் காபி பிரபலம்.
  4. இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
  5. அமேசான் மழைக் காடுகளின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.
  6. இந்த நாடு தென் அமெரிக்காவின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.
  7. ஐந்து வண்ணக் கற்களால் நீரில் தோன்றும் வானவில் போன்று இந்த நாட்டின் மிக அழகான நதி கேனோ கிரிஸ்டஸ் காட்சியளிக்கிறது.
  8. இந்த நாடு பனாமா, வெனிசுலா, பிரேசில், ஈக்வடார், பெரு போன்ற நாடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
  9. காண்பதற்கரிய வண்ணத்துப்பூச்சிகள், ஆர்கிட் செடிகள் மற்றும் அழகிய விஷத் தவளைகள் இங்கே உள்ளன.
  10. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்ற மிகப் பிரபலமான புத்தகத்தை எழுதிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

This 10 questions indicate a famous country. If you can find the answer, comment below..

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

One thought on “#27 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: