- முதன்முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் பென்டகன் இந்த நாட்டில் உள்ளது.
- இத்தாலியக் கடற்பயணியான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரைக் கொண்ட நாடு இது.
- ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினரான நாடு இது.
- ஐம்பது மாநிலங்களால் உருவான நாடு இது.
- மிசிசிப்பி மற்றும் மிசெளரி என்ற இரண்டு நீளமான நதிகள் பாயும் நாடு.
- எடிசன், கிரஹாம் பெல், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற பிரபல விஞ்ஞானிகள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- மைக்கேல் ஃபெல்ப்ஸ் மற்றும் முகம்மது அலி போன்ற விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
- டொனால்ட் டக் மற்றும் மிக்கி மவுஸ் போன்ற பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
- பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலை இந்த நாட்டு அடையாளங்களில் ஒன்று.

Above mentioned clues indicates the famous and developed country in the world. If anyone can find and comment below..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Correct Answer – United States of America