கல்யாணத்தைப் பிடிவாதமாக மறுக்கும் மைத்ரேயி கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்துக்கள் அவள் பெயருக்கு மாறும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார் மைத்ரேயியின் அப்பா. அதற்காக போலியாக ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். இந்நிலையில் மைத்ரேயியின் தோழி புவனா வேலை விஷயமாக அவள் வீட்டிற்கு வந்து தங்க, திருமணமான தன் தோழி புவனாவிடம் உதவி கேட்கிறாள் மைத்ரேயி. புவனா முதலில் மறுத்துப் பின், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் தன் கணவனை மைத்ரேயியிற்குப் போலியாகத் திருமணம் செய்து வைக்கிறாள். திருமணத்திற்கு சில தினங்களுக்குப் பின் மைத்ரேயி இறக்க, அவள் கொலை செய்யப்பட்டாளா? இல்லை தற்கொலை செய்து கொண்டாளா? எனக் காரணம் புரியாமல் திணறுகிறது போலீஸ். கிளைமாக்சை புக்கைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #niram_marum_nijangal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=589
Leave a Reply