புராதன ஓலைச்சுவடிகள் நாட்டுடைமையாக மாற்றப்படாமல் போனதால் சிலருக்கு சொத்துக்களாகவும், சிலருக்கு சந்தைப் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது.
இம்முறை ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் பாபு மூவரும் தங்கள் விடுமுறை தினங்களைப் பூரியில் களிக்க கடற்கரை விடுதியில் தங்கினர். அதிகாலை கடற்கரை நடையில் பயணம் ஒரு பிணத்திற்கு அருகே சென்று நின்றது. போலீசிற்கு தகவல் சென்றது. மர்மங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓய்வினைத் தொடர்ந்தார் ஃபெலுடா. தபேஷ் சுற்றுப்புற விசித்திரங்களைத் தலையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். புராதன ஓலைச்சுவடிகள் வைத்திருந்த சென். நெற்றியில் கைவைத்து எதிர்காலம் சொல்லும் ஜோதிடர். மணலில் தெரிந்த புதிதான, வினோத கால்தடங்கள், ஒரு மர்ம மனிதரின் திடீர் நட்பு. சுற்றுப்புறம் பழக்கமாக தொடங்கியதும், வழக்கம்போல் மர்ம வினைகள் நிகழத் தொடங்கியது, களவு, பிணம், குழப்பம், மர்மம்…
மர்மங்களின் காந்தமோ ஃபெலுடா. எங்கு சென்றாலும் அதுவாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது.
#one_minute_one_book #tamil #book #review #satyajit_ray #feluda #marana_veedu
Drop your Thoughts