#29 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் டி பெர்முடேஸ் என்பவர் 1505-ஆம் ஆண்டு இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்.
  2. இந்த நாட்டின் தலைநகர் ஹாமில்டன்.
  3. இந்த நாட்டின் சின்னம் சிவப்பு சிங்கம்.
  4. 7 பெரிய தீவுகளும் நிறைய சிறிய தீவுகளும் கொண்ட நாடு இது.
  5. இந்த நாடு வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.
  6. 1609-ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்தின் காலனி இந்த நாட்டில் உருவானது.
  7. இந்த நாட்டில் 5 வயது முதல் 15 வயது வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
  8. இந்த நாட்டின் முக்கிய விளைபொருட்கள்-வாழை, காய்கறிகள், பூக்கள், பால் பொருட்கள், தேன்.
  9. இந்நாட்டின் படிகங்களால் ஆன குகையும் இளஞ்சிவப்பு மணல் கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.
  10. தன்னாட்சி இந்த நாட்டில் உண்டு என்றாலும் ஒப்பந்தப்படி இந்நாட்டின் பாதுகாப்புக்கும் வெளியுறவுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.

Find this country. If you can..

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

3 thoughts on “#29 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: