மிஸ் இந்தியா பட்டம் வென்ற கையோடு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் கால் வைத்தாள் நர்த்தனா. தன்னுடைய அப்பா சொன்ன அடையாளங்களை வைத்து, புது கார் டிரைவரை அந்தக் கூட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போது இரண்டு ரௌடிகள் நர்த்தனாவிடம் வம்பிழுக்க, அவளைக் காப்பாற்றி வீட்டில் சேர்க்கிறான் டிரைவர் அசோக். அசோக்கின் சாதுர்யம் நர்த்தனாவிற்கு பிடித்துப் போக, அவன் விலகிச் சென்றாலும் வலிய போய் பேசுகிறாள் நர்த்தனா. இருவருக்கும் காதல் மலர, விஷயம் நர்த்தனாவின் அப்பா காதுக்கு செல்ல இங்குதான் விபரீதம் ஆரம்பமாகிறது. தன்னுடைய பல கோடி ரூபாய் சொத்துக்கும் சொந்தக்காரியான நர்த்தனாவை ஒரு கார் டிரைவருக்கு கல்யாணம் செய்து வைக்க உடன்படாத நர்த்தனாவின் அப்பா ஒரு திட்டம் தீட்டுகிறார். அதன்படி காரில் டைனமைட்டை வைத்து விபத்து போல சித்தரிக்க அசோக்கைக் கொல்ல சதி செய்கிறார்.
அசோக் அந்த சதியிலிருந்து தப்பித்தானா? இருவரின் காதல் ஜெயித்ததா? சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி அசோக்-நர்த்தனா திருமணம் நடந்தா? என்பதே “காதல் தேசத்துக்கு ஒரு விசா”.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kadhal_desatthukku_oru_visa
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1098
Leave a Reply