- இவர் 15/01/1841 அன்று பிறந்தார்.
- இவர் தமிழ்நாட்டின் விவசாயத்திற்காகவும், குடிநீர் பாசனத்திற்காகவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர்.
- தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் சில ஊர்களில் இன்றளவும் இவரது நினைவாக வருடந்தோறும் கடவுளை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
- 1899-ஆம் ஆண்டு பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க ஆஸ்திரேலியா அரசு இவரிடம் ஆலோசனை கேட்டது.
- இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
- கஷ்டப்பட்டு கட்டிய பாதி அணை நீரில் அடித்துச் செல்ல, இத்திட்டத்திற்கு ஆங்கிலேய அரசு பணம் ஒதுக்கீடு செய்ய மறுத்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள தன்னுடைய சொத்துக்களை விற்று சொந்தமாக அணையைக் கட்டி முடித்தார்.
- இன்றும் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு இவரின் பெயரை வைத்து இவரின் பெருமையைப் பறைசாற்றுகின்றனர்.
- தேனி புதிய பேருந்து நிலையம் இவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.
- தன்னுடைய மொத்த சொத்தையும் அணை கட்டுவதற்குப் பயன்படுத்திய இவரின் குடும்பம் பிற்காலத்தில் வறுமையில் வாடியது.
- கஷ்டப்படும் மக்களுக்காக இரக்கப்பட்டு அவர்களின் நலனுக்காக அணை கட்டிய இவர் 09/03/1911 அன்று இறந்தார்.
This above mentioned british person is most important person in tamilnadu. If anyone can find who is he?
#one_minute_one_book #tamil #book #review #gk #quiz
சரியான விடை – ஜான் பென்னிகுவிக்
Correct Answer – John Pennycuick