வாடகை தேவதை

சமீபத்தில் நடந்த டென்னீஸ் போட்டியில் வென்று உலக அளவில் இன்று பேசப்பட்டு வரும் குந்தவை டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பேட்டியை முடித்துவிட்டு திரும்புகையில் வீட்டில் ஒரு பூகம்பம் காத்திருக்கிறது என்று அவளுக்கு அப்போது தெரியாது. ராமன் நாயரும் அவரது மனைவி தங்கம்மாவும் தான் குந்தவையின் உண்மையான அப்பா அம்மா என்று சொல்லி டாக்டர் பாரிஜாதம் நர்ஸ் சுந்தரவள்ளியுடன் அவர்கள் இருவரையும் குந்தவையின் வீட்டிற்கு அழைத்து வர, அதைக் கேட்ட குந்தவையின் பெற்றோர்கள் இருவரும் தலையில் இடி விழுந்ததைப் போல அதிர்ந்தனர். பேச்சு கைகலப்பில் முடிய குந்தவையின் அப்பா அனந்தநாராயணன், நர்ஸ் சுந்தரவள்ளியைத் தள்ளி விட அவள் இறக்கிறாள். இந்நிலையில் கொலைப்பழி அனந்தநாராயணன் மேல் விழாமல் இருக்க தங்களுடைய மகளை ஒப்படைக்க மிரட்டுகிறார் ராமன் நாயர். அதற்கடுத்த நாளே ஹோட்டல் அறையில் ராமன் நாயரும் மனைவி தங்கம்மாவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட, ராமன் நாயர்-தங்கம்மாவின் பின்னணி என்ன? இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? குந்தவையின் உண்மையான பெற்றோர் யார்? இதுபோன்ற கேள்விகளுக்கு கதையின் கடைசியில் வரும் திருப்புமுனை முக்கிய பதிலாக அமையும்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vadakai_devathai

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=199

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: