Free Tamil e-Book Websites

இந்த டிஜிட்டல் உலகத்துல மட்டுமில்ல எப்பவுமே தகவல்களுக்கு ஒரு தனி மவுசு தான். தகவல்,  அப்படின்னு ஒன்னு இல்லைன்னா பேப்பருக்கு அவசியமே  இல்லாம போயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொன்னான  தகவல்கள்தான் இந்த பதிவு  “இலவச வாசிப்பு”.

வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த  பல குழுக்கள் பல காலகட்டங்களில் பல முயற்சிகளை  செஞ்சிருக்காங்க. இன்றளவும் செஞ்சிட்டு தான் இருக்காங்க. அதுல, சில முயற்சிகள் ரொம்ப அழகாகவும் வெற்றிகரமாகவும் இருந்திருக்கு. “இலவச வாசிப்பு” எப்போதும் பல பேருடைய பெருமுயற்சிகளுக்குப் பிறகு தான் கை வசப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Free Tamil EBooks :

வாசகர்களுக்கு  வேட்டைக்களமாக இந்த வலைத்தளம் நிச்சயம் அமையும். கல்வி, நகைச்சுவை, புனைகதைகள், சிறுகதைகள், ஆன்மீகம் போன்ற பலவிதமான வகைவகையான புத்தகங்களை இங்கு காணலாம். மேலும்  இதிலுள்ள புத்தகங்கள் அனைத்தும் Creative Commons  என்ற உரிம வகையில்  வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் பகிர்தல் போன்றவை சுலபமாக உள்ளது. மேலும் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது புத்தகங்களையும் இந்த வலைத்தளத்தில் பதிவிடலாம்.

https://freetamilebooks.com/

Project Madurai :

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது இந்த இணையதளம். இது ஒரு இணைய  மின் நூலகமாக செயல்படுகிறது. இந்த தளத்தில் தேசிய விருது பெற்ற நூல்கள், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ்சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பயன்படுத்திக்  கொள்ளலாம். குறிப்பாக அரசு போட்டித் தேர்வுகளில் போட்டியிடும் மாணவர்களுக்குத் தேவையான பல புத்தகங்கள் இலவசமாக வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது.

https://www.projectmadurai.org/pmworks.html

கீழடி பதிப்பகம் :

Google Play Books – இல்  பல மாறுபட்ட ஆக்கப்பூர்வமான புத்தகங்களை வெளியிடும் ஒரு அமைப்பு. கீழடி வெளியிடும் பெரும்பாலான  கதைகள் 15-20   பக்கங்களுக்குள் அடங்கிவிடும். இருந்தும் வலிமையான கருத்துக்களை  மனதில் பதிய வைக்கும். நவீனமயமான,  உணர்வுப்பூர்வமான,  சுவாரஸ்யமிக்க இளம் தலைமுறையினருக்கு ஏற்ற புத்தகங்களை இங்கு இலவசமாகப் படிக்கலாம். இதுவும் ஒரு வெற்றிகரமான  முயற்சியே.

பிரதிலிபி :

இது ஒரு வெற்றிகரமான செயலி என்று சொல்லலாம். பலரால் பயன்படுத்தப்படும் Open source  புத்தக செயலி. இதில் தமிழ் மட்டுமல்லாமல் வேறு பிற மொழிகளிலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. இது வாசிப்பிற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். இந்த Pratilipi செயலியை Play Store – இல் பதிவிறக்கம் செய்து, Install  செய்து கொள்ளலாம்.

tamil.pratilipi.com

மேலும் பிற மின்நூல்கள் தொடர்பான வலைத்தளங்கள் கீழே 

E-BOOKS

For Android, iOS, Kindle and PDF readers.

http://www.chennailibrary.com/av…

TAMIL E-BOOKS DOWNLOADS

தமிழ் புத்தக அலமாரி

TAMILAGAASIRIYAR: TAMIL E BOOKS

Tamil Ebooks Collection

http://books.tamilcube.com/tamil/

http://books.tamilcube.com/tamil/

http://www.tamilvu.org/library/

https://www.vinavu.com/2019/07/01/thoughts-of-periyar-evr-books-inpdf-format/

Home

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Karl%20Marx.html

https://www.tamildigitallibrary.in/

http://www.padippakam.com/

https://www.tnarch.gov.in/e-publication-books

http://www.noolaham.org

#one_minute_one_book #tamil #book #review #free_tamil_ebooks #websites

5 thoughts on “Free Tamil e-Book Websites

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading