காலபைரவன் எச்சரிக்கை – சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்த விபரீதமான ஃபிளக்ஸ் போர்டை பார்த்த ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் இது வெற்று மிரட்டல் என்று நினைத்த நேரத்தில் அதே போன்று இன்னொரு ரயிலில் கிடைக்கிறது. இரண்டு ஃபிளக்ஸிலும் இருந்த போன் நம்பர்களுக்கும் போன் செய்து எச்சரிக்கை செய்தது போலீஸ். ஆனால் விபரீதம் வேறு வடிவத்தில் வந்தது. வேறு கேஸ் விஷயமாக கமிஷனரைப் பார்க்கப் போன விவேக்கிற்கு இந்த ஃபிளக்ஸ் விவகாரம் தெரிய வருகிறது. மின்னல் வேகத்தில் இயங்கிய விவேக், கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பர்களில் இருந்த குழுவை வைத்து முக்கியமான ஒரு தடயத்தைக் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில் போலீசார் எச்சரிக்கை செய்த நபர்கள் கடத்தப்பட அவர்களை மீட்டுவர புறப்படுகிறான் விவேக்.
இப்படிக்கு ஓர் இந்தியன் – Crime Novel

Leave a Reply