சில்லுக் கருப்பட்டி

புத்தகங்கள் பற்றிய எனது வலைப்பூவில் முதன் முதலில் ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதுகிறேன். இது நான் சுவைத்த “சில்லுக் கருப்பட்டி”. இது ஒரு Anthology திரைப்படம். நான்கு வித்தியாசமான கதை. 1. Pink Bag | 2.காக்காக் கடி | 3.Turtle | 4.Hey Ammu. இது Movie Review இல்லை. இது எனக்குள் தோன்றிய சிந்தனைகள். (குறிப்பு : ரசனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.)

குப்பைமேட்டில் கதை பிறக்கிறது. ஒரு குழந்தைப் பருவக் காதல். நேர்முகம் பார்க்காமல் எந்த ஒரு ஒழுங்கீனமும் இல்லாமல், ஆசையும், ரசனையும், அக்கறையும்  துளிர்விடும் அந்த அன்பு, பார்க்கும் நம் மனதையும் வருடிச் செல்லும். “Pink Bag”. மனதில்  குப்பையை  சேர்த்து வைத்திருப்பவர்களைக் கூட தூய்மையான அன்பிற்கு ஏங்கச் செய்துவிடும்.

“காக்காக் கடி” ஒருவர் மீதான அன்பில் புரிதல், எதிர்பார்ப்பின்மை, அக்கறை பற்றிப் பேசும் படம். நிறம், மொழி, உடல் அன்பின் ஊடுருவலை தடுக்காது. மனம் மட்டுமே மனிதன். மனிதன் மனிதனாக இருக்கும்போதே “Unconditional Love”-க்கு  வாய்ப்பிருக்குமாம். இந்தக் கதை சொல்கிறது 🙂

100  வருடங்களுக்கும் மேல் ஆமைகள்  உயிர் வாழுமாம். இது  உயிரியல் உண்மை.  ஆனால் 40  ஆண்டுகளைத் தொட்ட மனிதனுக்கு மட்டும் இங்கு வாழ்க்கை அழுத்துவிடுகிறது. ஆமைகளுக்கு மட்டும் நூறு வருடம் எப்படி சாத்தியம்? ஆமைகளின் உளவியல் ரகசியமோ இந்த கதை?! சிந்திக்கிறேன். “Turtle”.  “அன்பு எப்போதும் அனாதை ஆகாது. மனதில் அன்பு ஒட்டாதவர்களே இங்கு அனாதைகள்”. இதை எனக்குப் புரிய வைத்தது இந்தக் கதை.

“Hey Ammu!!,  நீயும் நானும் என்பது நாமும் நம் குடும்பமும் என்றாகும் போது அன்பிற்கான வெற்றிடம் உருவாகும். அதை நிரப்ப Communication  முக்கியமாம். பேசினால் எல்லாமும் தீர்ந்து போகும் போது. இந்த இடைவெளி தீர்ந்து போகாதா என்ன?! இந்தக் கதையின் messege.

இது எனக்குள் பேசிய வார்த்தைகள் அழகான அனைத்து விஷயங்களையும் தந்துவிட்ட ஒரு மாயாஜாலம் “சில்லுக் கருப்பட்டி”. நான்கு பருவங்களையும் கடந்து வந்து பார்த்து விட்டது இந்த படம். நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் ஒரே பெட்ரோல்தான் “அன்பு”. நன்றி ஹலிதா சமீம்.

#one_minute_one_book #tamil #book #review #halitha_shameem #sillu karuppatti #anthology_movie #thoughts #tamil_movie_2020

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: