- இவர் 30-07-1886 அன்று புதுக்கோட்டையில் பிறந்தார்.
- இவர் 1912-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.
- இவர் இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
- இவர் சமூகப் போராளி, பெண்ணுரிமை ஆர்வலர், மருத்துவர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார்.
- அனாதைக் குழந்தைகளுக்காக இவர் உருவாக்கியதே ‘அவ்வை இல்லம்’.
- சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நிதி திரட்டியவர்.
- தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் இவர்.
- இவர் பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
- இவரது அரிய மருத்துவ சேவைக்களுக்காக 1956-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.
- இவர் 22-07-1968 அன்று மறைந்தார்.
Find the first female doctor in tamilnadu..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – முத்துலட்சுமி ரெட்டி
Correct Answer – Muthulakshmi Reddy