வந்தார்கள்..வென்றார்கள்.!

வாழ்ந்து சென்றவர்களை விட, வென்று சென்றவர்களே வரலாற்றில் பொறிக்கப்படுகிறார்கள். இது வென்றவர்களின் வரலாறு. இந்தியா பல இயற்கை அரண்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட ஒரு புதையல் பெட்டி. இந்திய வளங்களைப் பற்றிய கதைகள், பல கூட்டங்களை ஈர்த்தது. சவாலான அரண்கள் பல பலசாலிகளை வம்பிற்கு இழுத்தது.

கி.பி. 1191 முகமது கோரி தான் நம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த முதல் அச்சுறுத்தல். பிறகு தைமூர், கஜினி முகமது என்று ஒரு பெரிய பெயர்ப் பட்டியலே உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் வரும்வரை இந்தியா ராஜபுத்திரர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள், கில்ஜிக்கள் ஆகியோரின் பிடியில் இருந்தது. ஆனாலும் முகலாயர்கள் பயணம் இந்தியாவில் மிக நீளமானது. அதேபோல் முகலாய மன்னர்கள் வரலாறும் மிக சுவாரஸ்யமானது. எண்ணிலடங்கா படையெடுப்புகள், பல இந்தியர்களின் உயிரிழப்புகள், சதித் திட்டங்கள், ராஜதந்திரங்கள், நல்லாட்சிகள், சர்வாதிகாரிகள், அழிவுகள், சூறையாடல், உருவாக்கங்கள், ஆட்சி மாற்றங்கள், கொலைகள், பழிதீர்த்தல்கள் இவையனைத்தையும் கடந்து வரும் காலப்பயணத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இது இந்தியாவிற்கு வந்து இந்தியாவை வென்றவர்களின் வரலாறு.

“வந்தார்கள் வென்றார்கள்” ஆனந்த விகடனில் அதீத வரவேற்பைப் பெற்ற தொடர். இந்திய வரலாறு மதன் அவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு பல கோணங்களில் வித்தியாசமாக எழுதப்பட்ட ஒரு உண்மையான வரலாற்றுக் கையேடு. இந்த புத்தகம் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும், சிவில் சர்வீசஸ் படிப்பவர்களுக்கும் கூட பரிந்துரை செய்யப்படுகிறது. படிக்கும் சில சம்பவங்களை நேரில் நின்று காண்பது போன்ற மாயையை உருவாக்குவதில் வெற்றி கண்ட புத்தகம். வரலாற்றுத் தகவல்களுக்குப் பஞ்சமே கிடையாது.

#one_minute_one_book #tamil #book #review #medieval_indian_history #informative #madhan #vandhargal_vendrargal

want to buy : https://www.amazon.in/Vantharkal-Ventrarkal-Madhan/dp/818978059X

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading