இந்தியாவின் no.1 ஐ.டி.கம்பெனியில் சேர்வதற்காக இன்டர்வியூவிற்கு வந்திருந்தாள் சங்கமித்திரை. டெஸ்ட் பிரேக்கில் ரெஸ்ட்ரூம் போன அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தலையில் அடிபட்டு செத்த நிலையில் ஒரு பெண் கீழே கிடக்க, மூன்று பேர் ரத்தக்கறையுடன் நின்றிருந்தனர். நடந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் கம்பெனியின் டைரக்டர் திவாரி இருக்க, டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கமித்திரையைத் தேடி அந்தக் கம்பெனிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு கிடைத்த தகவல் வைரக்கடத்தல் கும்பல் வரை நீள்கிறது.
சங்கமித்திரை என்னவானாள்? கொலையின் பின்னணி என்ன? கொலையுண்ட பெண்ணிற்கும் திவாரிக்கும் என்ன சம்பந்தம்? டிடெக்டிவ் பாலச்சந்திரன் எப்படி கொலையாளியை நெருங்கினார் என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sangamithirai
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1028
Leave a Reply