அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக் கொள்ளச் சென்ற அண்ணாமலைக்கு ஆனந்தியை மிகவும் பிடித்துப் போக, ஆனந்திக்கும் அண்ணாமலையின் வெகுளித்தனம் பிடிக்கிறது. ஆனால், சூழ்நிலை இருவருக்கும் வேறுவேறு இடத்தில் முடிச்சுப் போடுகிறது. அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியைக் கல்யாணம் செய்து கொண்டு படாதபாடு பட, ஆனந்தி மாணிக்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டு கஷ்டப்படுகிறாள். காதலுக்கும் நட்பிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாத அண்ணாமலை, ஆனந்தியை இழந்து சூழ்நிலைக் கைதியாகிறான். உண்மையில் எல்லா சூழ்ச்சிகளுக்கும் சூத்திரதாரி மாணிக்கமே, ஆயினும் ஆசிரியர் அவனுக்கு கடைசியில் தக்க தண்டனை கொடுக்கவில்லை என்ற மனத்தாங்கல் வாசகர்களிடையே இருப்பினும் அதற்கான காரணத்தையும் ஆசிரியர் விளக்கியிருப்பது மேலும் சிறப்பு. இறுதியில் ஆனந்தி எவ்வாறு அண்ணாமலையின் சித்திரப்பாவையானாள் என்பதே அகிலன் அவர்களின் ஞானபீடப் பரிசு பெற்ற சித்திரப்பாவை.
UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதி.
#one_minute_one_book #tamil #book #review #akilan #chithirappaavai #jnanpith_award #upsc #mains_optional #tamil_literature
want to read free : https://archive.org/details/AKILANChithirapaavai/page/n7/mode/2up
Leave a Reply