நண்பரைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்த புரொபசர் பிரிஜேஷை சந்திக்க டெல்லி சென்றான் விவேக். காரணம் டெல்லியில் இருந்து சென்னைக்கு புரொபசருக்கு வந்திருந்த பார்சலில் விபரீதமான முறையில் இருந்த தலை முதல் கால் வரை உரித்து எடுக்கப்பட்டிருந்த மனிதத் தோல். பார்சலை டெல்லியிலிருந்து அனுப்பி வைத்தது ஒரு பெண். புரொபசர் தங்கியிருந்த வீட்டை அடைந்த விவேக்கை மேலும் திடுக்கிடச் செய்தது, கத்தியால் கொலையுண்டிருந்த ஒரு இளம்பெண். அந்த வீட்டில் புரொபசரும் இல்லை, அவரின் நண்பரும் இல்லை. பார்சலில் வந்திருந்த மனிதத் தோலைப் பற்றி விசாரிக்கச் சென்ற இடத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள், கத்தியில் கிடைத்த தடயம், விவேக்கிற்கு வந்த கொலை மிரட்டல் என கதையில் திருப்பத்திற்கு மேல் திருப்பமாக வர அனைத்திற்கும் “விடை சொல் விவேக்”.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vidaisol_vivek
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=791
Leave a Reply