#1 கதை சொல்ல போறோம்(Kutty Story #1)

வாழ்க்கையின் மதிப்புதான் என்ன ?

தன்னைப் பற்றி தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்புதான் என்ன? என்று கேட்டான். கடவுள்,  அவனிடம் ஒரு சிகப்புக் கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா, ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு மாதுளை வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அவன் ஒரு டஜன் மாதுளை கொடுப்பதாகக் கூறினான். அதையே உருளைக்கிழங்கு வியாபாரியிடம் காண்பித்ததற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாகக் கூறினான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 தருவதாகச் சொல்லவே, இவன் மறுக்க ஒரு லட்சம் தருவதாகச் சொன்னான். மீண்டும் அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு ஒரு இரத்தினக்கல் வியாபாரியிடம் சென்று அதன் மதிப்பைக் கேட்டான், அவர் பலமுறை பரிசோதித்துப் பின் இது மிகவும் அபூர்வமான மாணிக்கம். இது உனக்கு எங்கே கிடைத்தது? இதற்கு இந்த உலகையே விற்றுக்கொடுத்தாலும், இதற்கு ஈடாகாது என்றார். குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால் கடைசியாக ஒரே ஒருவர் தான் சரியான மதிப்பைச் சொன்னார். அது போல்தான் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக குறைத்து மதிப்பிடுவார்கள் அதற்கெல்லாம் வருத்தப்படாதே! உன்னுடைய உண்மையான மதிப்பை அறிபவரை நீ விரைவில் காண்பாய், அதுவரை மனம் தளராதே எனக் கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவர்களே! தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது! நம்மைப் பற்றி உயர்ந்த எண்ணம் முதலில் நமக்கு வர வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே! உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு நிகர் கிடையாது..!

#one_minute_one_book #tamil #book #review #moral_story #motivational_story

One thought on “#1 கதை சொல்ல போறோம்(Kutty Story #1)

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: