#2 கதை சொல்ல போறோம்(Kutty Story #2)

Advertisements

ஏ.டி.எம் கார்டு பெற்றோர்கள்! ஆதார் கார்டு பிள்ளைகள்!

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்று இருக்கிறார். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே என் வேலை, அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். இனி அவனுக்காக வாழப்போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவை இல்லை என கூறிவிட்டார். வருடங்கள் உருண்டோடியது. மகன் பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதி கொடுத்து ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து அங்கேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒருநாள் வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ வெண்ணெய் தீர்ந்து விட்டது என்று சொல்லி விட்டாள். மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ரொட்டித்துண்டை உண்டுவிட்டு நகர்ந்தார். மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணெயை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல் மகன் வியாபாரத்துக்கு கிளம்பினான். அந்த வெண்ணெயை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுவதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. மறுநாள் காலையில் தான் தகப்பனிடம் சென்று, “அப்பா வாருங்கள் நம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம்” என்றான். ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க… நானும் என் மனைவியும் வாடகை வீட்டிற்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதியதனைத்தையும் உங்கள் பெயருக்கே மாற்றிக்கொள்ளுங்கள். இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன். மாதாமாதம் சம்பளம் வாங்கும் சாதாரண தொழிலாளியாகவே இருந்துவிட்டு போகிறேன் என்றான். ஏன் இந்த திடீர் முடிவு? இல்லை அப்பா உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சாதாரண வெண்ணெய்க்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது. ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏ.டி.எம் கார்டாக இருக்கலாம். ஆனால் பிள்ளைகள் எப்பொழுதும் ஆதார் (அடையாளமாக) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்.

Advertisements

#tamil #one_minute_one_book #book #tamil_book #story #moral_story #motivation #motivational_story #tamil_story #kutty_story #short_story #red_stone_story #god_story #bibliophile #book_worm #international_book_day #storytelling #best #review #amazon_book_link #general_knowledge #free_tamil_book #ebook #kadha_solla_porom

Advertisements

6 thoughts on “#2 கதை சொல்ல போறோம்(Kutty Story #2)

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: