#37 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடு இது.
  2. இந்த நாட்டின் தலைநகர் மின்ஸ்க்.
  3. இரண்டாம் உலகப்போரில் மூன்றில் ஒரு பங்கு தனது மக்களை இழந்த நாடு இது.
  4. இந்த நாடு 25 ஆகஸ்ட் 1991-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
  5. இந்த நாட்டின் தேசிய விலங்கு ஐரோப்பிய எருது.
  6. சுமார் 300 வகையான உருளைக்கிழங்கு உணவுவகைகள் இந்த நாட்டில் பிரபலம்.
  7. வரலாற்றில் இதுவரை 18  தடவை அழிந்து மீண்டும் உயிர்த்தெழுந்த நகரம் மின்ஸ்க். எனவே ‘ஹீரோ சிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள்.
  8. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிய ராணுவம் இந்த நாட்டிலிருந்து பின்வாங்கிய தினமான மே 9 தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  9. இந்த நாட்டின் அண்டை நாடுகளாக ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா மற்றும் லத்வியா ஆகியவை உள்ளது.
  10. இந்த நாட்டின் கரன்சி ரூபிள்.

Find if you can Friends..

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

One thought on “#37 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: