வாயுபுத்ரர் வாக்கு

பிரகஸ்பதி..

தன் நண்பன் உயிரோடு கிடைத்த சந்தோஷத்தை விட, ஐந்து வருடங்களாக மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவனைத் துளைத்தெடுக்கிறது. மேலும் பஞ்சவடியில் தங்களைக் கொல்வதற்கு எதிரிகளான சக்ரவர்த்தி தக்ஷரும், அயோத்தி அரசர் திலீபரும் கைகோர்த்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சதி திட்டத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கும் ஒரு சூத்திரதாரி இருப்பதை சிவன் உணர்ந்தார். ஒரு யுகத்தின் மிகப்பெரிய நன்மையே(சோமரசம்) தீமையாக மாறும் என்பதை அறிந்த சிவனுக்கு தீமையை அழிப்பதில் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. இதைப் பற்றி மேற்கொண்டு அறிந்துகொள்ள வாயுபுத்ரர் குலத்தை சந்திக்க சிவனின் பரிவாரம் பரிஹா செல்கிறது. இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தக்ஷர் அழைப்பு விடுக்க, தனியே சதி செல்ல, சதியின் உயிர் இக்கட்டில் சிக்குகிறது. நிகழவிருக்கும் விபரீதத்தைத் தடுக்க சிவன் சென்றாரா? வாயுபுத்ரர் குலத்தை சந்தித்தபோது சிவனுக்குத் தெரியவந்த மிகமுக்கிய உண்மை என்ன? உலகின் ஒட்டுமொத்த தீமையாகக் கருதப்படும் சோமரசம் அழிக்கப்பட்டதா? அடுத்தடுத்த திருப்பங்களுடன் தனித்து விடப்பட்ட சிவன்.

#one_minute_one_book #tamil #book #review #shiva #amish #vaayu_puthirar_vaaku

want to buy : https://www.panuval.com/vayuputrar-vaku-10002719

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading