வணக்கம் மக்களே !!!
இவ்ளோ நாளா கரோனா நம்மள வீட்டுல அடைச்சு வெச்சு, வெச்சு செஞ்சிருச்சு.
ஊரடங்கு நம்ம கிட்ட இருந்து சில விஷயங்களை எடுத்துக்கவும் செஞ்சிருக்கும், அதே சமயத்துல புது அனுபவங்களை கொடுக்கவும் செஞ்சிருக்கும். ஊரடங்கு முடிஞ்சிருச்சு. ஆனா இந்த கரோனாவுக்கு ஒரு வழி பொறந்த பாடில்ல. இருந்தாலும் ஆறு மாசமா நிறுத்தி வெச்சிருந்த புத்தக கண்காட்சிகள், பாதுகாப்போடு திரும்பவும் நமக்காக வந்தாச்சு. அதே பாதுகாப்போடு நாமளும் புத்தக கண்காட்சிய வரவேற்க தயாராகனும்ங்கறத நம்ம மக்கள் கிட்ட வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை புத்தக கண்காட்சி
நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்
நாள் : 18.09.2020 – 28.09.2020 (10 Days )
இடம் : எஸ்.கே மினி ஹால், சி.எஸ்.ஐ வொர்க்ஸ் சாலை, குரோம்பேட்டை.
தள்ளுபடி : 10%
காரைக்குடி புத்தக கண்காட்சி
நடத்துபவர் : மீனாட்சி புத்தக கடை
நாள் : 17.09.2020 – 27.09.2020
இடம் : சரஸ்வதி மஹால் ,100 அடி ரோடு அருகில், காரைக்குடி.
தள்ளுபடி :10%
சிவகாசி புத்தக கண்காட்சி
நடத்துபவர் : பாரதி புத்தக நிலையம்
நாள் : 01.09.2020 – 30.09.2020
இடம் : பாரதி புத்தக நிலையம் , சி.எஸ்.ஐ ஞான பாக்கியம் பள்ளிக்கு எதிரில்.
தள்ளுபடி : 10% ( இந்து தமிழ் திசை வெளியீடுகள் மட்டும் )
Leave a Reply