வாய்மையே சில சமயம் வெல்லும்

ஸ்கூல் பிக்னிக் சென்றிருந்த சித்ராவிடம் அவளது அப்பாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக பொய்சொல்லி, உதவி செய்வது போல் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று மானபங்கப்படுத்தி போட்டோ எடுக்கிறான் சகல விதமான கெட்டப்பழக்கங்களும் உள்ள வினோத். சித்ராவைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல வருகிறார், சித்ராவின் வீட்டு மாடியில் தங்கியிருக்கும், அவளை ஒருதலையாக காதலிக்கும் விஜயகுமார். இதற்கிடையே மாதர் சங்கத்தைச் சேர்ந்த நித்யாவிற்கு சித்ரா பற்றி தெரியவர, தான் வினோத்திற்கு தண்டனை வாங்கித்தருவதாக கூற, கடைசியில் விஷயம் பேப்பரில் வெளிவருகிறது. மனமுடைந்த சித்ரா தற்கொலைக்கு முயல, அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முன்வருகிறான் விஜயகுமார். ஆனால், நடந்ததோ வேறு. விஜயகுமார் கிராமத்தில் அப்பாவிடம் தன் திருமணத்திற்கு சம்மதம் வாங்கச் சென்ற சமயம் வினோத் சித்ராவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். மேலே தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து புத்தகத்தை வாசியுங்கள்..!

#one_minute_one_book #tamil #book #review #sujatha #vaaimaiye_sila_samayam_vellum

want to buy : https://www.commonfolks.in/books/d/vaaimaiye-sila-samayam-vellum

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: