சுஜாதா சிறுகதைகள்

இந்த வலைப்பூவில் வரிசையாக புத்தகங்கள், தகவல்கள், தர்க்க ரீதியான கேள்விகளைத் தொடர்ந்து இனி சிறுகதைகள் பற்றிய பதிவுகளும் வரவுள்ளது.

சிறுகதைகளில் நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். அதில் எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பகுதி சிறப்பானது.

சிறுகதைகள் என்றால் என்ன..?

புத்தகங்கள், நாவல்கள் போன்ற மணிநேர வாசிப்பு அல்லாமல், நிமிடங்களில் முடிந்து ஆழமான சிந்தனையில் நம்மை நிலைக்க வைக்கும்.

கதாப்பாத்திரங்களின் அறிமுகம் சன்னமானதாகவும், நிகழ்வுகள் லேசானதாகவும், வார்த்தைகள் ஜாலங்களாகவும் மாறி நம்முள் தோற்றப் பிழைகளை ஏற்படுத்தி கடைசியில் ஒரு வார்த்தையில் கதை முடிந்துவிடும்.

இந்த வகையில் பல ஆழமான சிந்தனைகளையும் சில புதிய தகவல்களையும் வினோதமான கதைக்களத்தையும் வைத்து நொடிநேரத்தில் அசரடிக்கும் சக்தி கொண்டது சுஜாதாவின் சிறுகதைகள்.

இனிவரும் நாட்களில் ஏதேனும் மூன்று சுஜாதா சிறுகதைகளைப் பற்றி ஒவ்வொரு பதிவிலும் இருபது வார்த்தைகள் மிகாமல் காண்போம்.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: