காரில் கிடைத்த அந்த ஆண் பிணத்தைப் பற்றி கேள்விப்பட்ட விவேக்கிற்கு விசித்திரமாக இருந்தது. உடலில் வேறெந்த ரத்தக்காயமும் இல்லை. ஆனால், அவனுடைய மார்புப்பகுதியில் ஒரு ஓட்டை போட்டு மொத்த ரத்தத்தையும் உறிஞ்சியிருந்தார்கள். இந்தப் பிணம் கிடைத்த சிறிது நேரத்தில் டாக்டர் பரமேஸ்வரன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட, இரண்டு கேஸிலும் ஒரு நூலிழை ஒற்றுமை இருப்பதாக விவேக் உணர்ந்தான். விசாரணையில் முதலில் கொலை செய்யப்பட்ட நபர் சிதம்பரத்தைப் பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. ரேர் ப்ளட் குரூப்பைச் சேர்ந்த அவர் அடிக்கடி ரத்ததானம் செய்பவர் என்ற தகவல் விவேக்கிற்கு கிடைக்க, ப்ளட் பேங்க்கிலிருந்து இந்த கேஸை நகர்த்த முடிவு செய்கிறான் விவேக். ப்ளட் பேங்க் சென்றபின் விவேக்கிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் காத்திருந்தன. மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற செய்யப்படும் ரத்ததானத்தின் மகிமையை அனைவருக்கும் உணர்த்தவே வருகிறான் “மனிதன்”.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #manidhan
Leave a Reply