“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க”ன்னு சொன்ன வள்ளுவர் வார்த்தைக்கு இலக்கணமா வாழ்ந்திருக்காரு, இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள்.
நம்ம ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நகைச்சுவை இருக்குங்க. சீரியஸான இடத்துல கூட யாரால இயல்பா புன்னகைக்க முடியுதோ, அவங்களுக்கு எந்தக் கஷ்டமும் பெருசா தெரியாது. இந்தப் புத்தகத்தில்,
நாட்டைப் பற்றியும்..
பழைய படங்களில் வரும் தரமான நகைச்சுவை பற்றியும்..
சுற்றுலாவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சி பற்றியும்..
நம் தமிழ்நாட்டிற்கே உரிய திருவிழாக்கள் பற்றியும்..
கிராமத்தில் நாம் இழந்த அற்புதமான விஷயங்கள் பற்றியும்..
காலம் மறந்த எத்தனையோ சத்தான உணவுகளைப் பற்றியும்..
பக்கத்து வீடுகளில் வசித்தாலும், மன அளவில் இருக்கும் தூர இடைவெளிகள் பற்றியும்..
விரிவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். காலம் மறந்தாலும் சில தருணங்கள் நம் நினைவை விட்டு என்றும் அகலாது என்பதை அழகாக தொகுத்திருக்கிறார். நாம் மனது வைத்தால் நம்மையும் நம் சுற்றத்தையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகமும் இதை எழுதிய அதன் ஆசிரியருமே சாட்சி.
want to buy : https://routemybook.com/products_details/Vazhviyal-Nagaichuvai-8582
#one_minute_one_book #tamil #book #review #humorous #gu_gnanasambandhan #vazhviyal_nagaichuvai
Leave a Reply