கல்லூரித் தோழி அபிநயாவிடம் தன் அக்காவின் திருமணத்திற்குப் பண உதவி கேட்க அவள் வீட்டிற்கு வந்த விஜயாவிற்கு அந்த வீட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது அப்போது தெரியாது. யோகா மாநாட்டிலிருந்து இரவு வந்துவிடுவாள் என்று சொல்லி அபிநயாவின் கணவன் மோகன் சொல்ல, சற்று தயக்கத்துடனேயே தங்க முடிவெடுக்கிறாள். ஆபிஸ் வேலை இருப்பதாகச் சொல்லி மோகன் வெளியேற முதலில் அவளைத் தாக்கியது, பக்கத்து அறையிலிருந்த அபிநயாவின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த பூமாலை, வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு பிணம், அபிநயாவின் அறைக்கு கீழே கட்டப்பட்டிருந்த பாதாள அறை, வீட்டிற்குள் புகுந்த ஆண் உருவத்தில் இருந்த பெண். பீதியில் என்ன செய்வதென்று புரியாத விஜயா அவசரமாக அந்த வீட்டிலிருந்து வெளியேற, மர்மமான ஒரு கும்பலால் விஜயா கடத்தப்படுகிறாள். இதற்கிடையே காரில் விஷ ஊசி போடப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மோகன்.
அனைத்திற்கும் காரணம் ரோஜாத் தோட்டம். அது என்ன என்பதை விறுவிறுப்புடனும் கிலியுடனும் பரபரப்புடனும் சொல்வதே “திகில் ரோஜா”.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=315
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thigil_roja
Leave a Reply