பேசும் பொம்மைகள்

இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பம். அதில் ஆக்கபூர்வமானதும் உள்ளது. அழிக்கக்கூடியதும் உள்ளது. ஆனால், எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொட முடியாத எல்லைகளும் இருக்கத்தான் செய்கிறது.

சமீபத்தில் elon musk வெளியிட்ட ‘neuralink’ மாதிரியான தொழில்நுட்பங்கள் செல்போன்களுக்கு ஒருபடி மேலே சென்று நம் எண்ணங்களையும் எட்டிப் பார்க்கப் போகிறது.

சென்ற நூற்றாண்டில் வல்லரசுகள் ஒரு புது யோசனையை முன்னிறுத்தி ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே ‘downloading’.

மனித நினைவுகளை கணினி மூலமாக பதிவு செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம். இதை ஆதாரக் கருத்தாக வைத்து எழுதப்பட்டது தான் சுஜாதாவின் பேசும் பொம்மைகள்.

CMRI – Center for Mind Research of India மொத்த களேபரங்களுக்கும் மையப்புள்ளி.

மாயா ஒரு வசீகரமான பெண். சுனில் மாயாவின் காதலன். இருவரும் CMR-இல் சந்திப்பதாக கதை தொடங்குகிறது. மாயாவைச் சுற்றிப் பல வினோதமான செயல்பாடுகள். அவளது உடல்கூறுகள் அளவுக்கு மீறி ஆராயப்படுகிறது. அவளது நடை, பாவனைகள் கணிப்பொறிகளுக்கும், அவளது குரல் voice synthesizer-க்கும் பரிமாற்றப்படுகிறது. மேலும் சாரங்கபாணியின் வில்லத்தனமான பேச்சு மாயாவை மிரள வைக்கிறது.

இவை ஏற்படுத்தாத மாற்றத்தை மாயாவின் அக்கா மேனகா CMR இண்டர்காமில் இருந்து கால் செய்வது தெரிந்ததும் புயல், சுனாமி அடிக்கத் தொடங்கியது, அவள் மனதில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும்.

இக்கதை 1991-இல் குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. கணேஷ்-வசந்த் இடம்பெறும் கதைகளில் இதுவும் ஒன்று. நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு 2011-இல் புத்தகமாக வெளிவந்தது.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: