#5 கதை சொல்ல போறோம்(Kutty Story #5)

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கருப்பா..? வெள்ளையா..?

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப்பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து மிரட்டி, பணம் வாங்கிக் குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெரும் கெட்டகுணம் கொண்டவன்.

மற்றவன் சமூகத்தில்  மதிக்கப்படுபவனாகவும் நல்ல குடும்பத் தலைவனாகவும் நல்ல குணம் கொண்டவனாகவும் இருந்தான். அருமையாக தனது குடும்பத்தை பராமரித்து வந்தான்.

ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர் போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன? ஒரு பெரியவர் குடிகார மகனையும் நல்ல மகனையும் இப்படி கேட்டார், உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்? இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள். என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பா தான். “உன் அப்பா என்ன செய்தார்?” என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான். “எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் பகலிலும் இரவிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார். அடிகளுக்கு பஞ்சம் இல்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகி விட்டேன். மோசமான தகப்பனின் மகனாகிய நான் மோசமாகி விட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்” என்றான்.

உன் அப்பா என்ன செய்தார் என்று நல்லவனைக் கேட்டபோது சொன்னான், “எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் பகலிலும் இரவிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார். அடிகளுக்கு பஞ்சம் இல்லை. அதனாலே நான் குடிக்கக்கூடாது. குடிகாரனாகி விடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனாகிய நான் மோசக்காரனாக இருக்காமல் என்னுடைய குழந்தைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்” என்றான்.

எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை எண்ணங்களும் உண்டு, எதிர்மறை எண்ணங்களும் உண்டு.

This is the end of Kutty Story 5

#one_minute_one_book #tamil #book #review #kadha_solla_porom #kutty_story #karuppa_vellaiya

One thought on “#5 கதை சொல்ல போறோம்(Kutty Story #5)

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: