முதலமைச்சர் நீலமேகம் இறந்தபின் கட்சியில் அடுத்ததாக தனக்கு பதவி கிடைக்கும் என்ற நோக்கத்துடன் அவரைக் கொல்ல சதி செய்கின்றார் கல்வி அமைச்சர் பார்த்திபராஜன். அதைத் தெரிந்துகொண்ட கட்சித் தொண்டன் கல்யாணராமனையும் கொலை செய்கின்றனர் பார்த்திபராஜனின் ஆட்கள். இந்தக் கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் கண்ணனையும் தீவைத்து எரித்து விடுகின்றனர். அடுத்ததாக சுதந்திரதின விழாவிற்கு கோட்டையில் கொடி ஏற்ற சென்ற முதலமைச்சர் நீலமேகத்தைக் கொல்ல வெடிகுண்டு வைக்க, இந்த இடத்தில் விவேக் வருகிறான். சதி முறியடிக்கப்பட்டது. ஆனால், திடீரென முதலைமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட ஹாஸ்பிடலில் வைத்து அவரைக் கொல்ல பார்த்திபராஜன் திட்டம் தீட்ட, அந்த திட்டம் வெற்றி பெற்றதா? விவேக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா? விவேக் வகுத்த வியூகம் என்ன?
https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=570
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #unnai_vittal_yaarumillai
Leave a Reply