கோச்சடையான் | நரசிம்மவர்மன் | பதுமகோமளை | பரமேஸ்வர பல்லவர்
இந்த நாலு பேரையும் இணைக்கிறது சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன்
பல்லவ சாம்ராஜ்யத்தில் பெரும்படையோடு ஊடுருவி சின்னாபின்னமாக்கினான் புலிகேசி புதல்வன். பல்லவ கட்டுப்பாட்டில் இருந்த உறையூர் அரண்மனை சாளுக்கிய சேனையின் உறைவிடமானது. பல்லவ அரச வாரிசுகளும், விசுவாசிகளும் தலைமறைவானார்கள். பெரும்படையை கையில் கொண்டு உறையூரைச் சுற்றி இருந்த குறுநில மன்னர்களை மிரட்டி வாழ்வாதாரத்தைச் சூறையாடினான் புலிகேசி புதல்வன். தமிழ் மண்ணில் அந்நியன் ஒருவன் ஆளுவதா? கொட்டம் அடக்க அதீத மதிநுட்பத்துடன் பாண்டிய இளவரசன் வந்திறங்குகிறான், அவனே கோச்சடையான்.
‘சரித்திர நவீனம்’ அல்லது ‘வரலாற்றுப் புதினம்’. இது ஒருவகை புனைகதை. நிஜ வரலாற்று நிகழ்வுகள், நிகழ்ந்த போர்கள், போர் நிகழ்த்திய மன்னர்கள் இந்த தகவல்களை சேர்த்து கற்பனை கலந்து எழுதப்படுவது. உதாரணம் பொன்னியின் செல்வன்.
அதுபோல கோச்சடையான் குமுதத்தில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரனால் எழுதப்பெற்று வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்தக் கதை சிவகாமி சபதத்தின் தொடர்ச்சியாக அமைகிறது.
வாசகர்களின் புரிதலுக்காக முன்னுரையில் கதை தொடங்கிய புள்ளியை சுருக்கமாக விவரிக்கின்றார் எழுத்தாளர். மேலும் பல நிஜ கல்வெட்டு வார்த்தைகளை இணைத்திருப்பதும், எதிர்பாராத திருப்பங்களும், அதற்காக வரையப்பட்ட ஓவியங்களும் வாசிப்பிற்கு வலுசேர்க்கின்றன.
இந்தக் கதை சாளுக்கிய அரசனை பரமேஸ்வர பல்லவர், பாண்டியர்கள் துணை கொண்டு வென்ற போரை மையப்படுத்தி எழுதப்பட்டது.
#one_minute_one_book #book #tamil #Kochadayaan #Gowthama_neelambaran #epic_novel #historical_fiction
Leave a Reply