சினிமா வாய்ப்புக்காக சென்னை சென்றுவிட்டு திரும்பிய கைலாஷ் தான் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து அக்கம்பக்கத்தில் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் மனைவி தேவி எங்கே என்று தெரியவில்லை. தேவியைத் தேடிக் களைத்த கைலாஷ் உதவிக்கு போலீஸிடம் போகிறான். இதற்கிடையில் பார்சலில் ஒரு பெண்ணின் பிணம் போலீசிற்கு கிடைக்கிறது. அந்தப் பார்சலில் இருந்த பெண் தேவியோடு ஒத்துப்போக, கொலைக்கான காரணத்தை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அதே வேளையில் தேவியைப் பார்க்க வரவிருந்த அவளுடைய தோழி ஸ்வஸ்திகா திடீரென காணாமல் போகிறாள். ஸ்வஸ்திகாவின் வீட்டில் ரத்தம் தோய்ந்த சட்டையை போலீஸ் கைப்பற்றுகிறது. ஆனால், தேவியின் அடையாளங்களோடு கிடைத்த பிணம் ஸ்வஸ்திகா. அப்படியென்றால் தேவி எங்கே? ஸ்வஸ்திகாவின் கொலைக்கு யார் காரணம்? அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாரா விவேக்..?
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=587
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #ondrum_ondrum_moondru
Leave a Reply