பயங்கர அலறலுடன் வழக்கமாக வரும் அந்தக் கெட்டக் கனவிலிருந்து விழித்துக் கொண்டாள் ஆர்த்தி. தாத்தா-பாட்டியுடன் வாழும் இந்த ஆர்த்தி மிகப்பெரிய சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால், தங்கள் மகள் இறக்க காரணமாக இருந்த அந்தக் குடும்பத்தில் பேத்தியையும் இழக்க விரும்பாத தாத்தா-பாட்டி இருவரும் ஆர்த்தியை சிறுவயதிலேயே கண்காணாத இடத்திற்கு அழைத்து வந்தனர். திடீரென தாத்தாவின் உடல்நிலை மோசமாக, கையில் காசு இல்லாத நிலையில் அத்தை சிவகாமியிடம் உதவி கேட்கிறாள் ஆர்த்தி. ஆச்சரியப்படும் வகையில் உதவி கிடைக்க, அவர்கள் மூவரையும் தங்கள் வீட்டிற்கே தங்குவதற்கு அழைத்து திகைக்க வைக்கிறாள் சிவகாமி. இதற்கிடையே சிவகாமியின் மகன் ஆகாஷிற்கும் ஆர்த்திக்கும் இடையே காதல் மலர, அவர்களைப் பிரிக்க வருகிறான் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூர்த்தி. அந்தப் பெரிய வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்க யாரை நம்புவது என புரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள் ஆர்த்தி. இக்கதையின் கடைசியில் ஆர்த்தியின் அம்மா ஆனந்தி உயிருடன் வருவது, கதையில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது.
ஆனந்தி மறைந்து வாழ்ந்ததற்கான காரணம் என்ன? ஆகாஷ்-ஆர்த்தி திருமணம் நடந்ததா? மூர்த்தியின் திட்டம் பலித்ததா?
இந்தக் கதை சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மனோதைரியம், நிர்வாகம், பொறுப்பு, தலைமைப் பண்பு, சரியான முடிவெடுத்தல் போன்ற சிறந்த குணங்களை வெளிப்படுத்தும் கதை. சமூகத்தில் ஒரு பெண் ஆணுக்கு சமமாக அனைத்திலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு சான்று சிவகாமி கதாப்பாத்திரம்.
want to buy : https://routemybook.com/products_details/Manidharil-Ethanai-Nirangal-1738
#one_minute_one_book #tamil #book #review #n_ganesan #manidharil_etthanai_nirangal
Leave a Reply