மரகத லிங்கம் ஒரு காலத்தில் சிவன்குடியின் செழிப்பிற்கும் வனப்பிற்கும் காரணமாக இருந்தது. உச்சிப் பொழுதில் மரகத லிங்கத்தைப் பார்க்கும் போது மனித மனதின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது அந்த ஊரின் ஐதீகமாக இருந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த லிங்கம் ஒருநாள் திடீரென களவு போனது. அந்நாளில் இருந்து சிவன்குடி பொலிவிழந்து கலையிழந்து தன் மக்களையும் இழந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு இன்று அந்தப் பழம்பெருமை வாய்ந்த பாழடைந்த சிவன்குடி சிவன் கோவிலை சீர்செய்ய ஒருவன் வருகிறான். அன்றிலிருந்து நிகழவிருக்கும் அதிசயங்களையும் அவிழவிருக்கும் முடிச்சுக்களையும் எதிர்நோக்கி சிவன்குடி தனது பயணத்தைத் தொடங்குகிறது. நாமும் வாசிக்கத் தொடங்குவோம்..!
#one_minute_one_book #tamil #book #review #mystery #maragatha_lingam #indira_soundarajan
Drop your Thoughts