இனி, மின்மினி – Crime Novel

நியூயார்க்கில் உள்ள ஒரு தம்பதியின் மகள் சில்வியா. பெரிய பெரிய டாக்டர்களினாலேயே கண்டுபிடிக்க முடியாத விசித்திரமான நோய் அந்தப் பெண்ணுக்கு. தங்களுடைய வீட்டை விற்றால் தான் சில்வியாவின் மருத்துவ செலவைப் பார்க்க முடியும் என்ற சூழலில், வீட்டை விலை கேட்டு இந்தியாவிலிருந்து வருகிறார் விஜேஷ். உண்மையில் இதற்குமுன் அந்த வீட்டை விலைபேசி அக்ரிமெண்ட் போட்ட இருவரும் ஹார்ட் அட்டாக்கினால் இறக்க, விஜேஷை ஒரு பெண் போனில் எச்சரிக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனைவரும் நினைக்கும் சில்வியா, அவளுடைய வீட்டின் தரைக்கு அடியில் ஒரு மியூசியத்தை உருவாக்கி, அதில் அபூர்வமான விஷயங்களை சேகரித்தும் வந்திருக்கும் ஒரு திறமைசாலிப் பெண். அப்படிப்பட்ட பெண்ணுக்கு அந்த நோய் வரக் காரணம் என்ன? விஜேஷ் அந்த வீட்டை வாங்கினாரா? விஜேஷ் ஆபத்திலிருந்து தப்பினாரா? சில்வியா நோயிலிருந்து மீண்டாளா? போனில் எச்சரித்த பெண் யார்? போன்றவை அடுத்தடுத்து நிகழவிருக்கும் பரபரப்பைக் கூட்டும் நிகழ்ச்சிகள். படித்துப் பறக்கத் தயாராகுங்கள்..இனி மின்மினி..!

want to buy : http://www.pustaka.co.in/home/ebook/tamil/ini-min-mini

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #ini_minmini

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: