#6 கதை சொல்ல போறோம்(Kutty Story #6)

PROFIT ஆ..? LOSS ஆ..?

ஒரு அப்பாவும், 3 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. கடுப்பில் மகனுடைய கையைப் பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைக் கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால்..இனி விரல்களை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலிநிறைந்த கண்களுடன் அப்பாவைப் பார்த்து “அப்பா..என்னோட விரலுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா..?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீறல்களை கவனித்தார் என்ன எழுதியிருக்கிறது என்று..அந்த வாசகம் “ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களைப் பயன்படுத்துகிறோம்..பொருட்களை நேசிக்கிறோம்..எப்பொழுது தான் மனிதனை நேசித்து, பொருட்களைப் பயன்படுத்தப் போகிறோமோ..?

எப்போதும் PROFIT ஆ..? LOSS ஆ..?என வாழாமல், நம்முடன் இருப்பவர்கள் நம்மை நேசிக்கும்படி வாழ்வோம்.

This is the end of Kutty Story 6

Kutty Story #1 : வாழ்க்கையின் மதிப்புதான் என்ன ?

Kutty Story #2 : ஏ.டி.எம் கார்டு பெற்றோர்கள்! ஆதார் கார்டு பிள்ளைகள்!

Kutty Story #3 : நீங்க என்ன குப்பைத்தொட்டியா?

Kutty Story #4 : இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?

Kutty Story #5 : கருப்பா..? வெள்ளையா..?

#one_minute_one_book #tamil #book #review #kadha_solla_porom #kutty_story

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: