மூன்றாம் பரிமாண சிந்தனை..?!

“WRITER’S BLOCK”

இந்த வார்த்தை உங்களுக்கு புதுசா இருக்கலாம்.

இது ஒருவகை மனோநிலை, இது பொதுவா எழுத்தாளர்களுக்கு ஏற்படும்.

இந்த நிலையில சிக்கினா எழுத்தாளர் கதி அதோகதிதான்.

எவ்வளவு தெளிவா ஒரு விசயத்த புரிஞ்சு வெச்சிருந்தாலும் அத படைப்பாற்றலோட வெளிப்படுத்த முடியாம திணற ஆரம்பிச்சிருவாங்க.

இந்த WRITER’S BLOCK-ல சிக்குனவங்க சின்ன சின்ன எழுத்தாளர்கள் மட்டும் இல்லைங்க, என்ன மாதிரி (நகைச்சுவை J) பெரிய எழுத்தாளர்களும்தான்.

“WRITER’S BLOCK” பற்றி இங்க பேசவேண்டிய அவசியம் இருக்கு. காரணம் ஒவ்வொரு சாதாரண ஆளும் திக்கு திசை தெரியாம அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம சரியா சொல்லணும்னா “கண்ணைக் கட்டி காட்டுல விட்டது” மாதிரி சில பிரச்சினையில சிக்கி இருப்போம்.

இன்னும் தெளிவா சொல்ல முயற்சி பண்றேங்க.

“கற்பனை mode-அ on பண்ணி வெச்சுக்கோங்க..”

இந்தக் கதையோட கதாநாயகன் நீங்கதான்.

“உங்க ஊர்லயே நீங்கதான் ரொம்ப ஸ்மார்ட்டான ஆளு. அதனாலேயே உங்கள நிறைய பேருக்கு பிடிக்காது.”

“இவன் எப்படா சிக்குவான் வெச்சு செய்யலாம்னு ஒரு ஊரே வெய்ட்டிங்.”

“ஒரு நல்ல நாள்ல ஒரு கொலை வழக்குல உங்களை கோத்துவிட்டு, ஊர் பஞ்சாயத்துல மரணதண்டனை விதிச்சு தீர்ப்பு வந்திருச்சு.”

“நீங்கதான் புத்திசாலியாச்சே பேச வேண்டியதப் பேசி சொல்ல வேண்டியத சொல்லி ஒரு வழியா ஒரு செகண்ட் சான்ஸ் வாங்கிட்டீங்க.”

அது என்ன அப்படீன்னா..?

நம்ம புராதன முறைப்படி ஒரு சீட்டுல நீங்க நிரபராதின்னும், இன்னொரு சீட்டுல நீங்க குற்றவாளின்னும் எழுதி போட்டு உங்க கையாலயே அத எடுக்க வெச்சி, வர ரிசல்ட்ட பாத்து உங்கள முடிக்கறதா..? வேண்டாமான்னு..? முடிவு பண்ணலாம்னு ஒரு ஊர்சனம் எல்லாரும் ஒன்னுகூடி முடிவெடுத்தாங்க.

இங்கதான் ஒரு ட்விஸ்ட்ட வெக்கப்போறேன். நீங்க எடுக்கப்போற ரெண்டு சீட்டுமே “குற்றவாளி”ன்னு எழுதுன சீட்டுதான். இந்த வேலைதான் நடக்கும்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும். ஏன்னா..நீங்கதான் புத்திசாலி ஆச்சே..?!

என்னோட கேள்வி இதான். நீங்க என்ன செஞ்சு தப்பிக்கப் போறீங்க. வாழ்வா..? சாவா..?

திக்கி திணறடிக்கற இந்த வேலையில முட்டிமோதி வெளிய வர்றதுக்கு நமக்கு ஒரு யோசனை, அதாவது ஐடியா வேணும்.

உங்களுக்கு ஐடியா கிடைக்கலங்கற நிலைமைல பிரச்சினை உருவ அளவுல பெருசா தெரிய ஆரம்பிக்கும். அப்பறம் சொல்லவே வேண்டாம்.

இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலைய நாம கையாளணும்னா, பிரச்சினைய கொஞ்சம் மாத்தி யோசிச்சு, கண்ணோட்டத்த மாத்தி யோசிச்சு, வழியை மாத்தி யோசிச்சு மொத்தத்துல மாத்தி யோசிக்கணும்.

அந்த மனோநிலைதான் மூன்றாம் பரிமாண சிந்தனை. இங்க பலபேருக்கு தேவைப்படும் இந்த மனோநிலைதான் WRITER’S BLOCK-ல இருந்து வெளிவர ஒரேவழி.

மூன்றாம் பரிமாண சிந்தனைன்னா என்ன..? அத நாம எப்படி வளத்துக்கறது..? எப்படி பயன்படுத்தறதுன்னு..? இந்த புத்தகம் உங்களுக்கு சொல்லித் தரும். வாசிக்க அருமையாகவும் இருக்கும். அப்பறம் முக்கியமா மேல போட்ட புதிருக்கு விடையும் இதுல இருக்கும்.

தேடல் தொடரட்டும் one minute one book-உடன்..

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: