நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் தனக்குத்தானே மேம்பட்டவனாகப் பார்க்கப் பழகிவிட்டான். ஆனால், இயற்கை எல்லோரையும் சமமாகத் தான் வைத்திருக்கிறது. ஆயிரம் தான் பூசி மொழுகினாலும் பிறவிகுணம் கண்டிப்பா போகாது. அந்த மாதிரி கற்கால மனிதனிலிருந்து இக்கால மனிதனை எல்லா வகையிலும் செய்யும் ஒப்பீடே வெ.இறையன்பு எழுதிய “மனிதன் மாறிவிட்டான்”. இது ஒரு சிறப்பான முயற்சி. நம் உடல்மொழி, உறுப்புகள், நம் இயல்பான நடத்தை இவையனைத்தும் நாம் தோன்றியது முதல் இன்று வரை மாறாமல் இருப்பது அதன் காரணகாரியங்களே. அவர் எடுத்துக்கொண்ட களம் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் உளவியல் சம்பந்தமான பல கேள்விகளை தொகுத்திருப்பது இன்னும் ஆழமான நம்மைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். நாம் தூக்கத்திலிருக்கும் போது விழுவது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை இப்புத்தகம் கொடுக்கும். ஒவ்வொரு மனிதன் கையிலும், படிப்பறையிலும், நூலகத்திலும் இருக்கவேண்டிய புத்தகம்.
#one_minute_one_book #tamil #book #review #v_iraianbu #manithan_maarivittan
want to buy : https://www.amazon.in/Manithan-Maarivittan-V-Iraianbu/dp/8184766343
Drop your Thoughts