தீ நிலா..

ஆண்களின் தவறுகளை எல்லாம் தன் எழுத்துக்களில் தெறிக்கவிடும் எழுத்தாளர் இந்துவதனாவைச் சந்திப்பதை கடைசி ஆசையாக தூக்குத்தண்டனை விக்டர் தெரிவிக்கிறான். போலீஸ், நீதிபதி என யாரிடமும் இதுவரை சொல்லாதிருந்த கொலை செய்ததற்கான காரணத்தை இந்துவிடம் சொல்லி, எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதில்லை, தவறு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி தன் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதக் கோருகிறான். விக்டர் விவகாரத்தில் முக்கியமாக மாஜி எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருக்க, அவரிடமிருந்து இந்துவிற்கு மிரட்டல் வருகிறது. அதைப் பொருட்படுத்தாத இந்துவை பழிவாங்க அவளைக் கடத்தி எழுதும் அவளுடைய கையை உடைக்கிறார்கள். அதே நேரத்தில் இந்துவின் கணவன் வேறு ஒரு கும்பலால் கடத்தப்படுகிறான். மேற்கொண்டு இந்துவதனா செய்யப்போவது என்ன..? என்பதே “தீ நிலா”.

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=721

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thee_nila

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: