“இது எதிர்காலத்தின் கதை”
“என்ன ஒரே நிசப்தமா இருக்குது?”
என்று கூறிக்கொண்டே கண்களைத் திறந்தான். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே பழுப்பு நிறம் கொண்ட மேகங்களும் இருந்தது. அதைப் பார்த்த அவன், “ஓகோ மழை பெய்ய போகுதா, பெய்யட்டும் பெய்யட்டும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்தா சரி!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்த கையை அங்கும் இங்கும் துலாவினான். ஆனால், அவன் கையில் சிக்கியது வெறும் மண்ணே!! அதிர்ச்சியில் எழுந்து சுற்றிமுற்றி பார்த்த அவனுக்கு முகம் வியர்த்தது. காரணம் அவனைச் சுற்றி ஆளரவமற்ற வெற்றிடமே இருந்தது. பார்ப்பதற்கு செவ்வாய் கிரகம் போல் சிவப்புநிற மண்ணுடன், வறண்ட நிலமாக இருந்தது. நிலத்தில் ஒரு புல், பூச்சி கூட இல்லை. வானத்தில் மேகத்தைத் தவிர பறவைகள் எதுவும் தென்படவில்லை. இதனால் அவனுக்கு பயம் அதிகரித்தது, சத்தம் போட்டு கத்தினான், “அம்மா…அப்பா…” என்று அவன் எழுப்பிய சப்தம் வானம்வரை எதிரொலித்ததே தவிர வேறு எதுவும் நிகழவில்லை.
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அவனருகில் முளைவிட்டு சிலநாட்களே ஆன ஒரு செடி இருந்தது. அதை அவன் பார்த்த நொடியில் அது காற்றோடு காற்றாக கரைந்தது. அதைப்பார்த்த அவனுக்கு பேச்சே வரவில்லை. மெல்ல எழுந்து அந்த இடத்தை கடக்க எண்ணினான். அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவன் கால்கள் மண்ணில் புதைந்தது. ஏதோ பாலைவனத்தில் நடப்பதுபோல் தோன்றியது. ஆனால், அதைப் பார்க்க பாலைவனம் போல் இல்லை.(பிடிமானம் இழந்த மண்)
“இது என்ன இடம்? நான் எப்படி இங்க வந்து மாட்டினேன்? நான் எப்போ வீட்டை விட்டு வந்தேன்?” என்று ஆயிரம் கேள்விகளோடு கடினப்பட்டு நடந்தான். சிறிது தூரம் சென்ற பின்பு கெட்டியான மணற்பரப்பிற்கு வந்தான். தூரத்தில் ஏதோ உயரமான கட்டிடங்கள் இருப்பதுபோல் தோன்ற, அதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பின் அதைநோக்கி நடக்க ஆரம்பித்தான். அதன் அருகில் சென்ற பின்புதான் தெரிந்தது, அது ஒரு கைவிடப்பட்ட நகரம்?! அங்கு இருந்த கட்டிடங்கள் பலவும் சேதமாகி இருந்தது. எங்கு பார்த்தாலும் புழுதியும், சாம்பலுமாக இருந்தது. “கண்டிப்பாக இங்கு யாராச்சும் இருக்கணும்” என்று சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே சென்றான். அந்தக் கட்டிடச் சுவர்களில் இரத்தக்கரையாக இருந்தது. அதைப்பார்த்து அவனுக்கு பயமாகவும் இருந்தது.
சிறிதுதூரம் நடந்து சென்றபின் அவனுக்கு யாரோ நடமாடுவது போன்ற சத்தம் கேட்க அந்த சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தான். “யாரோ இருக்காங்க போலயே!” என்று கூறிக்கொண்டே நடக்க அவன் கண்ணுக்கு ஒரு உருவம் தென்பட்டது. அது பார்க்க ஏதோ ஒரு ஜந்து போல தோன்றியது. அது உடல் முழுவதும் செந்நிற கொப்புளங்கள் நிறைந்திருந்தது. பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அது மெல்ல இவனைப் பார்த்தது.
அதன் கண்கள் மிகக் கொடூரமாக இருந்தது. பார்க்க மனிதனைப் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும், அது மனிதஇனத்தைச் சேர்ந்ததாக இருக்கமுடியாது என்று எண்ணினான். “நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்” என்று இவன் மெல்ல பின்னோக்கி கால் வைத்தான். திடீரென அந்த ஜந்து அவனைத் துரத்த ஆரம்பித்தது. இவனும் தன்னால் முடிந்த அளவிற்கு ஓடினான். ஆனால், அந்த ஜந்து அவனைப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது. ஆச்சரியப்படும் வகையில் அந்த ஜந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது வெடித்துச் சிதறியது. அதை அவன் கவனிக்காமல் அந்த நகரத்தை விட்டு வெகுதூரம் கடந்துவிட்டான், “என்ன அதைக் காணோம்” என்று மூச்சிறைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான். “தப்பிச்சோம்டா சாமி!” என்று நிம்மதி அடைந்தான். ஆனால் மீண்டும் தனித்து விடப்பட்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதுவும் தென்படவில்லை!
ஓடி வந்ததால், “தண்ணீ, தண்ணீ” என்று தாகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான். சூரிய ஒளியை மேகம் மறைத்தே இருந்தது. சிறிதுநேரம் கழித்து அவன் கண்ணுக்கு ஒரு மிகப்பெரிய பள்ளம் தென்பட்டது, அதன் அருகே சென்று எட்டிப்பார்த்தான். அதில் சிறிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீர் பார்ப்பதற்குக் கருமையாக இருந்தது. அவன் அதையெல்லாம் கவனிக்கவில்லை. எப்படியோ தாகம் தீர்ந்துவிடும் என்று எண்ணி அதன் அருகில் சென்று சிறு ஊற்று போல ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றுநீரைக் குடிக்க தன் கையைவிட்டான்.
அவன் தன் கையை விட்ட “நொடியில் எச்சிலில் பட்ட பஞ்சுமிட்டாய் போல்” கரைந்தது. சட்டென்று தன் கையை வெளியே எடுத்தான். ஆனால் பயனில்லை அவன் கைகள் விரல்களற்று இருந்தன. அதைப் பார்த்து அவன் அலறித்துடித்தான். “ஐயோ என் கை….” என்று அலறிக்கொண்டிருக்கும்போது, ஆச்சரியப்படும் வகையில் அவன் கைவிரல்கள் மீண்டும் வளர்ந்தது. வலியும் குறைந்தது. பின் அந்த இடத்தைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தான். (தண்ணீர் குடிக்காவிட்டாலும் தாகம் தீர்ந்ததுபோல் தோன்றியது) அவன் கைவிரல்களையே ஆச்சரியத்துடன் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான். “இது என்ன கனவா? இல்ல நினைவா?” என்று எண்ணியவாறே தன் கையை கிள்ளிப்பார்த்தான். அது அவனுக்கு வலிப்பது போல தோன்றினாலும், உண்மையில் அவனுக்கு வலிக்கவில்லை!
வெகுநேரமானது, தள்ளாடி தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். சூரிய ஒளியே விழாததால் பகலா? இரவா? என்று அவனுக்குப் புரியவில்லை. திடீரென்று தூரத்தில் அவன் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று ஒரு ஒளி தெரிந்தது. தொலைந்துபோன பிள்ளைக்குத் தாயைப் பார்த்தால் என்ன உற்சாகம் பிறக்குமோ அதேபோல், அதைப் பார்த்ததும் அவனுக்கு உற்சாகம் பிறந்தது. வேகமாக அதைநோக்கி நடந்தான். அதனருகில் வந்ததும் அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அந்தப் பிரகாசமான ஒளி சூரியன் இல்லை, அது பார்க்க ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணத்தை கவிழ்த்தி வைத்ததுபோல இருந்தது, அதனுள் மரங்கள் இருந்தது.
சில நடமாட்டங்களும் தென்பட்டன. அதைப் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “அப்பாடி! நான் தப்பிச்சிட்டேன்” என்று எண்ணிக்கொண்டே அதன் அருகில் சென்றான். அதனுள் செல்ல பெரிய பலமான கதவு இருந்தது. அதனருகே சென்று அந்தக் கதவைத் தட்டினான். அந்தக் கதவுக்குப் பின்னால் இருந்த ஒரு காவல் அதிகாரி, “யார் நீ?” என்றுகேட்க, “எனக்குத் தெரியவில்லை” என்று அவன் பதில் கூற..! “எங்கிருந்து வர்ற?” என்றுகேட்க அதற்கும் அவன், “எனக்குத் தெரியவில்லை” என்று பதில் கூறினான்.
அந்தக் கதவைத் திறந்தபோது, அதில் இருந்து புகையாக வந்தது. அதிலிருந்து பாதுகாப்பு உடையணிந்த சிலர் வந்து இவனை உள்ளே வேகமாக அழைத்துச் சென்று ஒரு தனி அறையில் பூட்டினர். பின் அவன் உடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அவனைத் தூய்மைப்படுத்தி, புது உடை கொடுத்து ஒரு தனி அறையில் அமர வைத்திருந்தனர். பின் சிறுதுநேரம் கழித்து அவனைச் சுற்றி சில காவல் வீரர்கள் நின்றனர். அந்த இடமே பரபரப்பானது. வெள்ளை ஆடை அணிந்த ஒரு வயதான நபர் வந்தார்.
அவர் தான் அந்த நகரவாசிகளின் தலைவர். அவர் இவனை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தார். “நீ எப்படி உயிரோட இருக்க?” என்று அவர் கேட்க, உடனே அவன் “என்ன கேள்வி இது? நல்லா இருக்கியான்னு? தானே கேட்கணும்” என்று அவன் பதிலுரைக்க, அவர் சிரித்துக்கொண்டே, “உனக்கு விஷயமே தெரியாதா..? சரி சொல்றேன் கேளு. நூறு வருசத்துக்கு முன்னாடி மனிதர்கள் அதிகளவு ஆடம்பரத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும், முக்கியத்துவம் கொடுத்ததுனால இயற்கை அழிஞ்சது, மாத்தி மாத்தி சண்டை போட ஆரம்பிச்சாங்க, உலகம் முழுவதும் கதிர்வீச்சு நிரம்புச்சு, காற்று மாதிரி இந்த கதிர்வீச்சு இந்த பூமியை சுத்திட்டு இருக்கு. அது நம்ம மேல பட்டா ஒன்னு நாம சாம்பல் ஆயிருவோம், இல்லேன்னா உடம்பு முழுக்க கொப்புளமா வந்து பாக்கவே அருவருப்பா மாறிடுவோம், இல்லேன்னா நம்ம உடம்பு சுக்குக்சுக்கா வெடிச்சுரும்” என்று அவர் கூறிக்கொண்டிருக்க, “அப்போ இது பூமியா..?!” என்று அவன் கேட்க, “ஆமா இது பூமி தான், நீ வரும்போது ஒரு ஆறு பாத்தியா?” என்று அவர்கேட்க அவன் தலையசைத்தான்.
“அந்த தண்ணில கை விட்டேனா உன் கை கரைஞ்சு போயிடும். ஏன்னா, அது தண்ணி இல்ல அது அமில ஆறு. நல்லவேளை நீ அந்தத் தண்ணிய குடிக்க முயற்சி பண்ணலேனு நினைக்குறேன். ஏன்னா உன் கை நல்லாதானே இருக்குது” என்று அவர் கூறி முடிக்க அவன் தன் கைகளைப் பார்த்தான். “கை கரைஞ்சுருமா?” என்று தன் கைவிரல்களை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். “சரி சொல்லு நீ யாரு..?” என்று அவர்கேட்க அதை கவனிக்காமல், “நான் யார்? நான் யார்?” என்று கூறிக்கொண்டே தன் கையை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் ரவி…எந்திரிக்க போறியா இல்லையா..? மணி ஆச்சு எந்திரி” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திடுக்கிட்டு விழித்து எழுந்தான். அது வேறு யாரும் அல்ல. அவனுடைய அம்மாதான். “ஏன்டா முகமெல்லாம் வேர்த்திருக்குது, கெட்டகனவு வந்துச்சா? சரி போய் மூஞ்சியக் கழுவு” என்று கூறிவிட்டு தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். “இதெல்லாம் கனவா..? நிஜம் மாதிரியே இருந்துச்சு” என்று கூறிக்கொண்டு எழுந்தான். அவன் அறை முழுவதும் ஹாலிவுட் படங்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தன. தொலைக்காட்சியில் அமேசான் காட்டுத்தீ பற்றி எரிவதை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. பின் ஏதோ ஒன்று தோன்ற தன் வீட்டின் தோட்டத்திற்கு ஓடி வந்து பார்த்தான். அங்கே புதிதாக அரும்பு விட்ட குட்டிச்செடியைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு வியப்புகலந்த சிரிப்பு தெரிந்தது!
“காலம் கடத்தாதே மனிதா..!”
-செ.தனீஷ்வரன்
#one_minute_one_book #tamil #book #review #short_story #thulir #se_dhanishwaran
Nice one bro🔥
Superb story..nice finishing..good thoughts…very needful moral..🌟🌟
Amazing thinking 💭……. Stuffs 💥
Superb story.when it mention ஜந்து I think it tells about the corona but finally it says about the detoriation of natural resources amazing
Thambi, super story,
Ur way of thoughts very good
I have imagined
Best wishes
Happy new year….
Regards
SARAVANAKUMAR
Thambi, short story super, good.
I have imagined ur story.
Keep it….
Happy New Year…..
Regards
Saravanakumar
Sprb nanba ✌👌👌
இச்சிந்தனைகளை யவரும் உணராவிடின்…இக்கனவும் ஒரு நாள் நிஜமாகும்…..😬
Very good
Thoughts are the basic requirements for achieving new goals
Good thought.. shows ur social responsibility
Kavya
Good thought pa☺️. Keep doing. Vera level👌
Amazing thoughts nanba keep going.
Creativity level….👌👌👌
Keep going daa , amazing writing
Vera level creativity 👌. Keep doing ☺️
Excellent effort. The way of writing also too Good. Congratulations.
✌
Super book
Nice one! Interesting to read! Superb Creativity level ! Keep it up😊
Superb story amazing I think it is based on corona but finally it says about the detoriation of natural resources. Good too good