
STORY 1 :
Name : Jorge William Push
Title : One of the Minute
Story : As they sow ,so let them reap This sentence is very correct. And change in our lifestyle. One of the minute to change.

STORY 2 :
Name :ராகவி
Title : முகமூடி
Story : சமீபத்தில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஹீரோ பாலா தன் மேலாளரை எப்போதும் (பூச்சாண்டி என்று) திட்டிக்கொண்டே இருப்பான். மற்ற அனைவரையும்விட எனக்கு வேலைப்பளு ஜாஸ்தி; இன்சென்டிவ் இல்லை; எப்போதும் என்னை கடிந்துகொள்கிறார் என்று அவன் குடித்துவிட்டு பலமுறை அவன் நண்பர்களிடம் புலம்புவான். இப்படி அவன் புலம்புவதை அவன் “நண்பனான” ஒருவன் போனில் ரெக்கார்ட் செய்து அவன் மேலாளரிடம் காட்டிவிடுவான். அவனை அழைத்த அந்த மேலாளர் அவனின் ஐந்து லட்சம் மதிப்பிலான, இதுவரை அவனுக்கு செலுத்தப்படாத இன்சென்டிவைக் காட்டி “நான் உன்னை மற்ற அனைவரையும் விட வேலை அதிகம் வாங்கினேன், உன் இன்சென்டிவை பே செய்யாமல் வைத்தேன். உன் தங்கை திருமணத்திற்கு நீ பணம் சேர்க்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால், நீ சீக்கிரம் மற்றவர்களைவிட ஓட வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால்தான் உனக்கு மற்ற அனைவரையும்விட வேலை ஜாஸ்தி கொடுத்தேன். உன் இன்சென்டிவ் அப்போதே கொடுத்திருந்தால் நீ அதைக் குடித்து வீண் செய்திருப்பாய். அதனால் தானே தவிர உன்னிடம் பூச்சாண்டியாக இருக்கவேண்டும் என்று இல்லை”, என்று அவர் கூறி முடிப்பதற்கு முன்னரே பாலா அவர் காலிலே விழுந்துவிடுவான்.
நம்மில் பலர், நம்மிடம் சிரித்துப் பேசுபவர்கள் பாசமானவர்கள் என்றும், கடுமையாகவும் கோபமாகவும் நடந்துகொள்பவர்கள் அக்கறை இல்லாதவர்கள் என்றும் நினைத்துவிடுகிறோம். ஆனால், பல வருடங்கள் கழித்து யோசித்தால் அப்படி நம் மேல் கோபம் கொண்டவர்களே நாம் வாழ்வில் முன்னேற மிக முக்கியக் காரணமாக இருந்திருப்பார்கள்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கணக்குப் பாடத்திற்கு ஒரு ட்யூஷன் சென்றேன். அந்தக் கணக்கு வாத்தியார் என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். அவர் என்னுடைய சிறிய பிழைகளுக்குக் கூட பலமுறை என்னை எழுத வைப்பார். இவரின் முகத்தில் சாயம் பூசவேண்டும் என்றே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். பல ஆண்டுகள் கழித்து யோசித்தால் அந்த ஆசிரியர் இல்லை என்றால் நான் கணக்கில் கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்றிருக்க மாட்டேன். அந்த மதிப்பெண்களே எனக்கு அரசு கல்லூரியில் சீட் கிடைக்க செய்தது. அதுவே என்னை இன்று நல்ல வேலைக்கும் வழி வகுத்தது.
ஒருநாள் அவரை சந்திக்க நேர்ந்தபோது இதை கேட்டேவிட்டேன். “நீ நன்றாக படிக்கும் மாணவி தான். ஆனால் சோம்பேறி, தினமும் விளையாட்டு ஜாஸ்தி. அதனால் உன்னிடம் கடினமாக இருந்தேன்”, என்று கூறினார்.
நம்மிடம் கோபமாகவே இருக்கும் தந்தை, திட்டிக்கொண்டே இருந்த ஆசிரியர், வேலை அதிகம் வாங்கிய மேலாளர், அதட்டும் உறவினர். பலவருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால் இவர்களே நம்மீது பாசம் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள்.
என் அம்மா என்னிடம் கூறிய ஒன்று நினைவுக்கு வருகிறது. “பல மனிதர்கள் உன்னிடம் முகமூடியுடன் பழகுவார்கள். அதைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை என்றால் நீ வாழ்வில் மிக கஷ்டப்படுவாய்”. எவ்வளவு நபர்கள் என்னிடம் கோபம் காட்டிய ஒரே காரணத்திற்காக வெறுத்து இருக்கிறேன். பாசமாக இருக்கிறார்களே என்று நம்பிய பலர் ஏமாற்றி இருக்கிறார்கள்.
இறுக்கமாக இருக்கும் மனிதர்கள் பலர் வாழ்வில் பெரும்சுமையை சுமந்து கொண்டிருக்கும் அல்லது சுமந்த மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தம்மை போன்றவர்கள் தங்களின் தவறுகளை செய்துவிடக்கூடாது என்றே இவ்வாறு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படி போன்றவர்களின் கோபங்களினால் மட்டுமே வாழ்வில் பல முறை சரியான வழியில் சென்று இருக்கிறோம். அந்த கோபமான முகமூடியை கழட்டிப் பார்க்க பழகிக்கொள்வோம். அங்கே மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியுமோ என்னவோ!
#tamil #book #review #writing_contest #corona #thoughts
Leave a Reply