அந்த நிமிடம் ஹாஸ்பிடலில் இருந்த கீர்த்தனாவுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல கண்முன் வந்துபோனது. கீர்த்தனாவின் அப்பா அஸ்வினிகுமாரை மாப்பிள்ளையாக செலக்ட் செய்தது, அஸ்வினிகுமாரை மீட் பண்ண கீர்த்தனா ரெஸ்டாரன்ட் போனது, அங்கே அவன் மூச்சுபேச்சற்ற நிலையில் இருந்தது, ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அவனுடைய செல்லுக்கு போலீசிடமிருந்து போன் வந்தது, இது எல்லாவற்றையும் விட அஸ்வினிகுமார் ஒரு மாதம் பாண்டிச்சேரி மென்டல் கேர் ஹாஸ்பிடலில் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்தது பற்றி அங்கிருந்த நர்ஸ் சொல்ல கீர்த்தனா சற்று ஆடித்தான் போனாள். தனக்கு கணவனாக வரப்போகிறவன் தன்னிடம் ஏதோ சொல்ல வந்தபோது கொலைமுயற்சி நடந்திருப்பதால், இதற்கு பின்னால் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடைதேட முடிவெடுக்கிறாள். எதிர்பாராதவிதமாக அஸ்வினிகுமாரின் நண்பர்களில் ஒருவனான சார்லஸ் தற்கொலை செய்து கொள்ள கேஸ் திக்கு தெரியாமல் போலீசைத் திணறடிக்கிறது. அஸ்வினிகுமாருக்குள் உறைந்து போன உண்மை வெளியே வந்ததா என்பதே மீதிக்கதை.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=398
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #uraindhu_pona_unmai
Leave a Reply